Latest Post


நாட்டின் அமை­திக்கு குந்­தகம் விளை­விப்­போரை விடு­தலை செய்­யக்­கூ­டாது, அதற்கு துணை போகவும் கூடாது என்­பதில் நாம் மிகவும் தெளி­வா­கவே இருக்­கிறோம். நாட்டில் இரத்­தக்­கறை படிந்த சம்­ப­வங்கள் அரங்­கே­று­வ­தற்கு தேசத்தை நேசிக்கும் எந்­த­வொரு முஸ்­லிமும் துணை­போக மாட்டான் என திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் தெரி­வித்தார்.

ஞான­சார தேரரின் விடு­த­லைக்­கான சில முயற்­சிகள் அண்­மைக்­கா­ல­மாக திரை­ம­றைவில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற நட­வ­டிக்­கைகள் குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில்,

நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­தபின் இன­வா­தி­களின் செயற்­பா­டுகள் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டன. எனினும், இரண்டு பார­தூ­ரமான சம்­ப­வங்கள் கிந்­தோட்­டை­யிலும் கண்­டி­யிலும் திட்­ட­மி­டப்­பட்டு அரங்­கேற்­றப்­பட்­டன. கடந்த அர­சாங்­கத்தில் இன­வாத செயற்­பா­டு­களை அரங்­கேற்­றி­ய­வர்­களே இதன் பின்­ன­ணியில் இருந்­தனர். மஹிந்த ஆட்­சியில் இவர்­க­ளுக்கு எதி­ராக சட்டம் தன் கட­மையை செய்­ய­வில்லை. எனினும் நல்­லாட்­சியில் சில கைதுகள் இடம்­பெற்­றன. இதனால் நாம் ஓர­ளவு திருப்­திப்­பட்டோம் எனினும் முழு­மை­யாகத் திருப்­தி­ய­டை­வ­தற்குத் தேவை­யான அடுத்­த­கட்ட நகர்­வு­களை முன்­னெ­டுத்து வரு­கிறோம். எல்லா ஆட்சிக் காலத்­திலும் இன­வாதம் இருந்தே வரு­கி­றது.
மஹிந்த ஆட்­சியில் கூடு­த­லா­கவும் ரணில் ஆட்­சியில் குறை­வா­கவும் இருந்­தி­ருக்­கி­றது. எந்த தரப்­பிலும் முற்­று­மு­ழு­தாக இன­வாதம் இல்­லா­தி­ருந்­த­தில்லை. நாம் குறை­வாக இன­வாதம் இருக்கும் தரப்­பி­லி­ருந்து அதனை முற்­றாக இல்­லாமல் செய்­வ­தற்கே பாடு­ப­டு­கிறோம்.

ஞான­சார தேரர் தான் அளுத்­கம கல­வ­ரத்தின் பிர­தான சூத்­தி­ர­தாரி. அவ­ருக்கு எதி­ராக எந்த நட­வ­டிக்­கையும் இது­வரை மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. அவர் சட்­டத்தை மீறி இன்னும் பல குற்றச் செயல்­களை மேற்­கொண்­டுள்ளார். ஊட­க­வி­ய­லாளர் எக்­னெ­லி­கொ­டவின் மனை­வியை அச்­சு­றுத்­தி­யமை மற்றும் நீதி­மன்­றத்தை அவ­ம­தித்­தமை குறித்த விவ­கா­ரத்­தி­லேயே அவ­ருக்கு சிறைத்­தண்­டனை வழங்­கப்­பட்­டது. நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கில் சிறைத்­தண்­டனை பெறும் நபரை விடு­விக்க நாம் துணை போவ­தா­னது சட்­ட­வி­ரோ­த­மான செயற்­பா­டா­கவே இருக்­கி­றது.

பொது­பல சேனா அமைப்­புடன் பல கட்டப் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­னார்கள். அங்கு என்ன பேசப்­பட்­டது என்று நமக்குத் தெரி­யாது. இந்தப் பேச்­சு­வார்த்­தைக்கு தலைமை தாங்­கி­ய­வர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு பிரச்­சி­னைகள் வரும்­போது மக்கள் பிர­தி­நி­தி­களை கைநீட்­டு­வார்கள்.

ஞான­சார தேரரை விடு­விக்க துணை­போ­வ­தா­னது சட்­டத்தை நசுக்கத் துணை­போ­வ­தற்கு சம­மா­ன­தாகும். அவர் பல வகை­யிலும் நாட்டு சட்­டத்தை மீறி­யுள்ளார். அத்­தோடு சட்­டத்தை தன் கையி­லெ­டுத்து காடைத்­த­னத்­தையும் அரங்­கேற்­றி­யுள்ளார். காலா கால­மாக நட்­பு­ற­வுடன் வாழ்ந்த இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கும் பௌத்­தர்­க­ளுக்­கு­மி­டையில் விரி­சலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார். சமா­தா­னத்தை விரும்­பு­ப­வர்கள் அவரின் விடு­த­லைக்கு துணை­போக மாட்­டார்கள்.

ஞான­சார தேரர் குற்­றத்­துக்கு மேல் குற்றம் செய்­தி­ருக்­கிறார். அவர் அர­சியல் நிகழ்ச்சி நிர­லுக்கு ஏற்ப செயற்­பட்­டி­ருக்­கின்­ற­மையை கடந்­த­கால சம்­ப­வங்கள் மூலம் நாம் அறிந்­தி­ருக்­கிறோம். ஜனா­தி­ப­திக்கும் சில ராஜபக் ஷாக்­க­ளுக்கும் அவர் தேவைப்­ப­டலாம். அதற்கும் முஸ்லிம் பெயர் தாங்­கிய சிலர் துணைபோய் முஸ்லிம் சமூ­கத்தை ஆபத்தில் சிக்கவைக்கக்கூடாது.
மஹிந்த ராஜபக் ஷ பிரதமராகப் பதவியேற்ற சில தினங்களில் கண்டி கலவரத்திற்கு காரணமான அமித் வீரசிங்க உள்ளிட்ட சிலர் பிணையில் விடுதலையாகினர். தற்போது மாவனெல்லை பகுதியில் ஓர் அச்ச சூழல் உருவாகியிருக்கிறது. இத்தருணத்தில் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பளிப்பதானது மேலும் பல பிரச்சினைக்கு வழிவகுக்கலாம். எனவும் இம்ரான் மஹ்ரூப் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஔிபரப்பு கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி சேவை, லேக்ஹவுஸ் நிறுவனம் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகிய அரச ஊடகங்கள் நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 

அத்துடன் பொலிஸ் திணைக்களம் தொடர்ந்தும் ஜனாதிபதியிடம் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு அமைச்சுக்களுக்குமான வேலைகள் மற்றும் கடமைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அச்சிடுவதற்காக கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்க அச்சக திணைக்கள திணைக்களம் தெரிவித்துள்ளது.


பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சர்கள் ரிசாத் பதியுதீன், ரஞ்சித் மத்து பண்டார மற்றும் தியகமகே ஆகியோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமையைக் காண சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் கிளிநொச்சியில் பயணித்தனர்.

Prime Minister Ranil Wickramasinghe led ministries Rishat Bathiudeen, Ranjith Matthu Bandara and Thiyagamage were traveling to Kilinochchi by special helicopter to see the conditions of the flood victims.


இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. 

அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 183.17 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மையில் அதிகரித்திருந்த நிலையில் இன்று வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.அமைச்சு, பிரதியமைச்சுப் பதவிகளை பெற்று உலகம் சுற்றுவதைவிட்டு, இந்த மக்களுக்கு உதவுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

வடக்கில் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேற்று (25) சென்று பார்வையிட்ட நாமல் ராஜபக்ஸ அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் இருந்த காலத்தில் நாம் வடக்கில் பல வீடுகளை நிர்மாணித்தோம். இந்திய வீட்டுத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆனால் இன்று அவை அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

அரசியல் போட்டிக்கு மத்தியில் அவை நிறுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்தினால் யாருக்கு பெயர் புகழ் கிடைக்கவேண்டும் என்பதிலேயே பிரச்சினை இருக்கிறது. அரசாங்கம் பெயர் எடுக்க வேண்டுமா அல்லது இந்த பிரதேசத்திலுள்ள அரசியல்வாதிகள் பெயர் எடுக்க வேண்டுமா என்று போட்டி உள்ளது.

மக்களிடம் வாக்குகளைப் பெறுவதற்காகவே இவை அனைத்தும் செய்யப்படுவதாக தெரிகிறது. மக்களிடம் வாக்குகளைப் பெற்றதன் பின்னராவது மக்களுக்கு சேவை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். முதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள்.

அமைச்சு, பிரதியமைச்சு பதவிகளைப் பெற்று உலகம் சுற்றுவதைவிட்டு, இந்த மக்களுக்கு உதவுங்கள். வாக்களித்த மக்களுக்கு நீங்கள் கைக்கொடுக்க வேண்டிய நேரம் இது.

இங்கு அரசியல் கட்சி முக்கியமில்லை. மக்களுக்கான உதவிகளே முக்கியமாகவுள்ளது. எனவே இவர்களுக்கு உதவுமாறு நான் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் எனவும் இதன் போது நாமல் ராஜபக்ஸ கூறினார்.

சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் தொழிற்சங்கங்கள் இன்று (26) நள்ளிரவு முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

தங்களது பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தி அதனூடாக தீர்வை முன்வைக்க போக்குவரத்து அமைச்சர் இதுவரை முன்வராதமையால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்ததாக அச்சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தங்களின் பிரச்சினைக்கு விரைவாக தீர்வை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வரவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த வேலை நிறுத்தத்தில் புகையிரத எஞ்சின் சாரதிகள் சங்கம், கட்டுப்பாட்டாளர்கள் சங்கம், நிலையப் பொறுப்பாதிகாரிகள் சங்கம் ஆகியனவும் ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாகவும் இந்திக தொடங்கொட குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் சொத்துக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தியவர்களிடமே அதற்கான இழப்பீடுகளையும் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்களால் பாராளுமன்ற சொத்துக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் குறித்து பிரதான மதிப்பீட்டாளரின் அறிக்கைக்காக பொலிஸார் காத்திருப்பதுடன், அதன் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சபையில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக கடந்த 29ஆம் திகதி ஆறு பேர் பிரதி சபாநாயகர் தலைமையிலான குழுவொன்றை சபாநாயகர் கரு ஜயசூரிய நியமித்திருந்தார்.
இந்தக் குழு எதிர்வரும் வியாழக்கிழமை பொலிஸ் திணைக்கள அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளதாகவும் பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிறி குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்திலுள்ள சொத்துக்கள் அனைத்தும் காப்புறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் பிரதி சபாநாயகர் சம்பந்தப்பட்டவர்களிடம் நஷ்ட ஈட்டை அறவிட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வடக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறும் பாதுகாப்பு முகாம்களிலிருந்து மீள்குடியேறும் மக்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றை விரைவாக நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் வட மாகாண ஆளுநருக்கும் மாகாண அரச அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கில் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் பெருமளவு வெள்ள அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளதுடன், அங்குள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் இன்றைய தினமும் (25) தொடர்ந்து இடம்பெற்றது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களினதும் ஒருங்கிணைப்புடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, உலர் உணவு, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் 18,638 குடும்பங்களைச் சேர்ந்த 60669 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் 37 முகாம்களில் தங்கியுள்ளனர். 26 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், மேலும் 114 வீடுகள் பகுதியளவு சேதமடைந்திருப்பதாக அப்பிரதேசங்களிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகள் பாதிப்புக்குள்ளாகாதவர்கள் மீண்டும் தமது இருப்பிடங்களில் குடியேறுகின்றபோது உணவுகளை தயாரிப்பதற்கு தேவையான உபகரணங்கள், சேதமடைந்த வீடுகளை புனர்நிர்மாணம் செய்வதற்கு உதவும் வகையில் ஆரம்ப கட்டமாக 10,000 ரூபா வழங்குவதற்கும், நட்டங்களை மதிப்பீடு செய்ததன் பின்னர் அதிகபட்சம் 250,000 ரூபா வரையில் நிதியுதவியை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் அம் மாவட்டங்களில் சுமார் 8,000 ஏக்கர் வயல் நிலங்கள் முழுமையாக வௌளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அக்காணிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு தலா 40,000 ரூபா நட்டஈடாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அசுத்தமடைந்துள்ள வீடுகள், வியாபார நிலையங்கள், கிணறுகள் மற்றும் கழிவறைகளை சுத்தப்படுத்துவதற்கு தேவையான நிகழ்ச்சித்திட்டங்களை மாகாணத்தின் அரச நிறுவனங்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.

முப்படையினரின் பங்களிப்புடன் தொடர்ந்தும் மக்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் கர்ப்பிணி தாய்மார் மற்றும் நோயாளிகளை படகுகள் மூலம் பாதுகாப்பாக மீட்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐக்கிய தேசிய முன்னணியை, ‘ தேசிய ஜனநாயக முன்னணி’ என்ற பெயரில் அரசியல் கட்சியாகப் பதிவுசெய்வதற்கு பங்காளிக்கட்சிகள் பச்சைக்கொடி காட்டியுள்ளன.
எனவே, ஜனவரி முதல்வாரத்தில் பதிவுக்குரிய பூர்வாங்க நடவடிக்கை இடம்பெறும் என்று ஐக்கிய தேசியக்கட்சி இன்று அறிவித்தது.

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகியன பங்காளிக் கட்சிகளாக அங்கம் வகிக்கின்றன.

ஐக்கிய தேசிய முன்னணி இன்னும் அரசியல் கட்சியாகப் பதிவுசெய்யப்படவில்லை. எனவே, ஐ.தே.கவின் யானை சின்னத்திலேயே மேற்படி கூட்டணி தேர்தலுக்கு முகங்கொடுக்கின்றது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஐக்கிய தேசிய முன்னணியை, தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் அரசியல் கட்சியாகப் பதிவுசெய்வதற்கு ஐக்கிய தேசியக்கட்சி நடவடிக்கை எடுத்துவருகின்றது.

இதற்கு அக்கட்சியின் மத்தியசெயற்குழுவும் அனுமதி வழங்கியுள்ளது. நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் இறுதி முடிவுஎடுக்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் இந்நடவடிக்கைக்கு தோழமைக்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.


கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். 

பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளான்.

சம்பவம் தொடர்பில் பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தலவில கடற்பரப்பில் திமிங்கிலங்களின் கூட்டம் கரைக்கு அண்மித்த பகுதிகளில் வருகைத்தருவதாக கற்பிட்டி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக இந்த திமிங்கிலங்கள் குறித்த கடற்பகுதிக்கு கூட்டங்கூட்டமாக வருகைத்தந்து, அங்கு சுற்றி திரிவதாகவும், குறித்தக்கூட்டத்தில் 50 திமிங்கிலங்கள் வரை காணப்படுவதாகவும் கற்பிட்டி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி மஞ்சுல குமார தெரிவித்தார்.

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.