இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவின் போது இலங்கை அணியின் சிறந்த களத்தடுப்பு காரணமாக இங்கிலாந்து அணி 310 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இந்த போட்டியில் நாணயச் சுழற்ச்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது.
இந்தநிலையில் இங்கிலாந்து அணியின் சார்பாக டெஸ்ட் போட்டிகளில்  10,000 ஓட்டங்களை கடந்த முதலாவது இங்கிலாந்து  வீரர் என்ற சாதனையை தக்கவைத்துக்கொள்ள  இங்கிலாந்து அணித்தலைவர் அலிஸ்டர்  குக்கிற்கு 20 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் 15 ஓட்டங்கள் மாத்திரமே பெற்று ரசிகர்களுக்கு பெரும்  ஏமாற்றத்தை அளித்துள்ளார்.
இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியிலேயே இந்த இலக்கை பெறுவார் என்று ரசிகர்கள் நினைத்த போதிலும் 2 ஆவது டெஸ்டிலும் முதல் இன்னிங்ஸில் இலக்கை தவறவிட்டு ஆட்டமிழந்தமை இங்கிலாந்து ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை இங்கிலாந்து அணியின் முதல் நாள் ஆட்டத்தின்போது அணியின் சார்பாக அதிகபட்சமாக அலெக்ஸ்ஹெல்ஸ் 83 ஓட்டங்களையும்,ஜோ ரூட் 80 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் நுவான் பிரதீப் 3 விக்கட்டுகளையும், சிறிவர்தன 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.