Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

பனிச்சறுக்கு விளையாட்டின் போது குழியில் விழுந்த நபர்: 5 நாட்களுக்கு பின் மீட்ட அதிசயம்

Bublished By Online Ceylon on Thursday, May 26, 2016 | 7:37 PM

பிரான்ஸ் நாட்டில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுப்பட்ட நபர் ஒருவர் குழியில் விழுந்ததை தொடர்ந்து அவரை 5 நாட்களுக்கு பிறகு பொலிசார் உயிருடன் மீட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு பிரான்ஸில் உள்ள Pyrenees என்ற மலைப்பகுதியில் பெயர் வெளியிடப்படாத நபர் ஒருவர் பனிச்சறுக்கு விளையாட கடந்த வெள்ளிக்கிழமை அன்று புறப்பட்டுள்ளார்.
42 வயதான அந்த நபர் விளையாட்டில் ஈடுப்பட்டபோது, எதிர்பாராத விதமாக அங்குள்ள ஒரு பிளவில் விழுந்துள்ளார். ஆனால், அவரால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை.
இந்நிலையில், நபரை காணாமல் அச்சம் அடைந்த அவர்களது உறவினர்கள் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
புகாரை பெற்ற பொலிசார் மீட்புக்குழுவினர் மற்றும் ஹெலிகொப்டருடன் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர்.
4 நாட்களாக தேடியும் நபரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், நேற்று தேடுதல் பணியில் உள்ளபோது மீட்புக்குழுவினர் ஒருவித ஒலியை எழுப்பிக்கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது, ஒரு சிறிய குகை வடிவத்தில் இருந்த பிளவில் இருந்து முனகல் சத்தம் கேட்டுள்ளது.
உடனடியாக செயல்பட்ட மீட்புக்குழுவினர் உள்ளே சென்று, உயிருடன் இருந்த அந்த நபரை வெற்றிகரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
நபருக்கு காலில் சிறிய காயங்கள் மட்டும் ஏற்பட்டு இருந்துள்ளது. ஆனால், அவர் சுயநினைவுடன் பொலிசாரிடம் பேசியுள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியாக 5 இரவுகள் பிளவுக்குள் இருந்து உயிருடன் நபர் மீட்கப்பட்டுள்ளது அவரது குடும்பத்தினரை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved