Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

கங்கைகளின் நீர் மட்டம் அதிகரிப்பு : மக்கள் அவதானத்துடன் இருக்கவும்

Bublished By Online Ceylon on Tuesday, May 31, 2016 | 5:42 PM

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில கங்கைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
களு, கிங் மற்றும் நில்வலா ஆகிய கங்கைகளின் நீர் மட்டமே இவ்வாறு அதிகரித்துள்ளதாகவும், இதனால் தாழ் நிலங்கள் சிலவற்றில் வௌ்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடுபிலி தெரிவித்துள்ளார்.
எனவே குறித்த கங்கைகளைச் சூழவுள்ள பகுதியிலுள்ள மக்கள் காலநிலை குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
களு கங்கையின் நீர் மட்டம் உயர்வடைவதனால் சிறிய வெள்ளப்பெருக்கு  ஏற்படும் நிலை காணப்படுவதாகவும் இதனால் விஷேடமாக இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும் படி அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிங் கங்கையின் நீர் மட்டம் உயர்வடைதுள்ளதுடன், நில்வளா கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையினால் அகுரெஸ்ஸ பரதுவ மற்றும் பானதுகம பிரதேசங்கள் நீரினால் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved