Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

சந்திமால் அபார சதம் : இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து மீண்டது இலங்கை

Bublished By Online Ceylon on Tuesday, May 31, 2016 | 7:39 AM

இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில், தினேஷ் சந்திமாலின் அபார சதத்தின் துணையுடன் இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து இலங்கை அணி மீண்டுள்ளது.
முன்னர் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 132 ஓவர் நிறைவில் 9 விக்கெட் இழப்புக்கு 498 ஓட்டங்களை பெற்றது.
இதனடிப்படையில் முதலாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, இங்கிலாந்து அணியின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 101 ஒட்டங்களுக்குள் சுருண்டது.
இதையடுத்து, 397 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்த இங்கிலாந்து அணி, பலோ ஓன் முறையில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாட அழைக்க, நேற்றைய மூன்றாவது நாள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 309 ஒட்டங்களை பெற்றிருந்தது.
இத்தொடரில் கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வந்த இலங்கை அணி, கடந்த போட்டியை போலவே இப்போட்டியிலும் இன்னிங்ஸ் தோல்வியை எதிர்கொள்ள நேரிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய நாளில் சந்திமாலின் அபார சதத்தின் துணையுடன் இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து இலங்கை அணி மீண்டுள்ளது.
தற்போது இலங்கை அணி, 6 ஒட்டங்கள் முன்னிலையில் துடுப்பெடுத்தாடி வருகின்றது. களத்தில் தினேஷ் சந்திமால் 106 ஒட்டங்களுடனும், ரங்கன ஹேரத் 37 ஒட்டங்களுடனும் நிதானமாக துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved