Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

ஊடகங்கள் வெளியிட்ட பொய்யான செய்திகள் கண்டிக்கத்தக்கது - முபாரக் மவ்லவி

Published on Sunday, May 22, 2016 | 6:10 PM

வெல்ல‌ம்பிட்டி அன‌ர்த்த‌த்தில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளை மீட்டெடுப்ப‌தில் ச‌ம‌ய‌ வேற்பாடு பார்க்க‌ப்ப‌ட்ட‌தாக‌ சில‌ ஊட‌க‌ங்க‌ள் பொய்யாக‌ செய்தி வெளியிட்டுள்ள‌மை க‌ண்டிக்க‌த்த‌க்க‌தாகும் என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் மௌல‌வி தெரிவித்தார். அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து
க‌ல்முனையில் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின் ஊட‌க‌ மாநாட்டில் அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து,

வெல்ல‌ம்பிட்டி அன‌ர்த்த‌த்தின் போது அர‌சாங்க‌த்தின் இராணுவ‌ம் த‌விர‌ வேறு எந்த‌ நிறுவ‌ன‌மும் உத‌வ‌ முன்வ‌ராத‌ நிலையில் ஸ்ரீ ல‌ங்கா த‌வ்ஹீத் ஜ‌மா அத் ம‌ட்டுமே முத‌லில் க‌ள‌மிற‌ங்கி ம‌க்க‌ளை வெள்ள‌த்திலிருந்து

வெளியேற்றுவ‌தில் முனைப்புட‌ன் செய‌ற்ப‌ட்ட‌ன‌ர் என்ப‌து அனைவ‌ருக்கும் தெரியும். இந்த‌ நிலையில் மேற்ப‌டி த‌வ்ஹீத் ஜமா அத் ம‌க்க‌ளை மீட்கும் ப‌ணியில் ஈடுப‌ட்ட‌ போது  முஸ்லிம்க‌ளை ம‌ட்டுமே மீட்ட‌தாக‌ சில‌ சிங்க‌ள‌ த‌மிழ் ஊட‌க‌ங்க‌ள் செய்தி வெளியிட்டிருப்ப‌து உண்மைக்கு புற‌ம்பான‌தும் இன‌ங்க‌ளுக்கிடையில் க‌ச‌ப்பை ஏற்ப‌டுத்தும் நோக்கில் உள்ள‌தாக‌வே உல‌மா கட்சி பார்க்கிற‌து.

மேற்ப‌டி அன‌ர்த்த‌த்தின் போது எத்த‌கைய‌ இன‌ பேத‌மும் பாராம‌ல் ஸ்ரீ ல‌ங்கா த‌வ்ஹீத் ஜ‌மா அத் செய‌ற்ப‌ட்ட‌த‌ற்கான‌ விடியோ ஆதார‌ங்க‌ள் உள்ள‌ன‌.
ஆக‌வே வெள்ள‌ அன‌ர்த‌த்தில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளை இன‌ ரீதிய‌மாக‌ பிரிப்ப‌தோ அவ‌ர்க‌ள் ம‌த்தியில் இன‌ முர‌ண்பாடுக‌ளை ஏற்ப‌டுத்த‌ யாரும் முய‌ற்சிக்க‌ வேண்டாம் என‌ உல‌மா க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து. -
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved