Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

தமிழ்வின் இணையம் கக்கிய இனவாத கருத்துக்கு மறுப்பு

Bublished By Online Ceylon on Monday, May 23, 2016 | 11:41 AM

இனவாதத்தால் உதவிகள் பாரபட்சம் பார்க்கப்படுவதாக கூறும் நீங்கள் வடக்கில்  மத இனவாதங்களால் அழிந்துபோன முஸ்லிம்களை பற்றி என்ன சொல்லப்போகிறீர்கள்?பாதிக்கப்பட்ட இடத்தில்  இருந்தும் தமிழ் சிங்களம் கிறிஸ்தவம் பார்க்காமல் முஸ்லிம்களின் உதவிகள் தொடர்கின்றன.தமிழ்வின் எல்லாவற்றையும் இனத்துக்கு எதிரான செய்தியாக பார்க்காமல் வடக்கில் இருந்து மேற்குக்கு  உதவிகளை அனுப்பும் செயல்திட்டங்களை செய்ய பாருங்கள்.ஐரோப்பாவில் இருந்துபுலம்பெயரந்தவர்கள் ஊடாக உங்கள் உதவிகளை அனுப்ப முயற்சியுங்கள்.இப்படியான உதவிகள் ஊடாகவே இனவாத மதவாத போக்குகளை அகற்ற முடியுமே தவிர அனர்த்த நேரங்களில் அனல்பறக்கும் பக்கசார்பற்ற எழுத்துக்களால் சுமூகமான சமூக உறவை ஏற்படுத்த முடியாது.

இலங்கையில் பாதிக்கப்பட்ட எமது முஸ்லிம்கள்கூட எமது அரசியல்வாதிகளை நம்பி இல்லை.முஸ்லிம் இளைஞர்கள் தன்னார்வமாக  ஜாதி மதம் தாண்டி உதவிகளை செய்துவருகின்றனர்.எங்கள் அரசியல் வாதிகள் உதவவில்லை என்ற குறையுடன் விமர்சனம் செய்துவிட்டு நாம் ஒதுங்கவில்லை.எமதுபொதுமக்கள் உதவுகின்றனர்.

தமிழ்நாட்டில் வெள்ளம் வந்தநேரம்முஸ்லிம்கள் இந்து கிறிஸ்தவன் என்று பேதம் பார்க்காமல் உதவினர்.அதற்கு தமிழ்நாட்டு அரசதனியார் ஊடகங்களில் இருந்து முகநூல் ஊடகங்கல்வரை முஸ்லிம்களின் சேவையை பாராட்டின.அதன் தொடர்ச்சியை இங்கும் காணமுடிகிறது.

சில அரசியல் இனவாதிகளால் அழிந்துபோன இலங்கையை மீண்டும் இனாவாதம் பேசி நாசம் செய்யாமல் ஆக்கபூர்வமாக கருமம் ஆற்ற வாருங்கள்.முஸ்லிம்கள் எப்போதும் உதவிக்கரம் நீட்டிக்கொண்டே இருப்போம்.இனவாத தீ முஸ்லிம்களை காவுகொண்டது.பின் வடக்கில்தமிழர்களையும் காவுகொண்டது.மீண்டும் ஒரு அழிவு வேண்டாம்.ஒன்று சேர்வோம்.நம்நாட்டை  நாமே காப்போம்.இப்படியான நேரத்தில் இப்படியான பதிவுகளை எழுதுவதில் இருந்து இவ்வூடகம் தவைர்துகொள்ள வேண்டும்.

நன்றி: அஹமத் ஜம்சாத்
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved