Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

மடவளை கான் நானாவின் ஜனாஸாவில் அத்துமீறிய ஜும்மா பள்ளி நிர்வாகம்

Bublished By Online Ceylon on Monday, May 23, 2016 | 3:26 PM

திரளாகப் வீட்டைச் சூழ்ந்து  பலவந்தமாக குடும்ப பெண்களையும் தாக்கி அவர்களின் பிள்ளைகள் கதற கதற கான் நானாவின் ஜனாஸாவை தூக்கி சென்றனர்.
==============================

மடவளை சேர்ந்த கான் நானாவின் ஜனாஸாவை பள்ளி நிர்வாகம் பின்னர் திட்டமிட்டு அரசியல் பின்னணியுடன் அவருடைய வீட்டிலிருந்து  காடையர்களை வரவழைத்துப் பெரும் திரளாகப் வீட்டைச் சூழ்ந்து  பலவந்தமாக குடும்ப பெண்களையும் தாக்கி அவர்களின் பிள்ளைகள் கதற கதற ஜனாஸாவை தூக்கி சென்றனர்.

அப்போது கான் நானாவின் ஜனாஸா வீட்டை சுற்றி இருந்த 20 க்கும் 30 க்கும் இடைப்பட்ட சகோதரர்களின்  ஒன்றாகச் சேர்த்து
அங்கிருந்த சகோதரர்களைக் கதறக் கதறக் கருவறுத்துள்ளனர்.

  கலகக்காரர்களிடம் கடுகளவு கூட இஸ்லாமிய உணர்வோ, ஈவு இரக்கமோ இல்லை என்பதற்கான அவர்களின் புதல்விகளின் வாக்குமூலம் சாட்சியங்களாகத் திகழ்கின்றன.

இந்த அநியாயத்தைச் செய்தவர்கள், தூண்டி விட்டவர்கள், துணை நின்றவர்கள் அனைவரும் குற்றவாளிகளே! தண்டிக்கப்படவேண்டியவர்களே! அவர்களுக்கு இந்த உலகத்திலேயே உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுக்க எமது சகோதரர்களும், மனித நேயம் மிக்க நடுநிலை மக்களும் பணியாற்றக் கடமைப்பட்டுள்ளனர்.

இவர்களின் பண-பலமும், அரசியல் அதிகாரமும் சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்வின் முன் அடிமைப்படும் நாள்வரும். இந்தக் கொடூரங்களுக்கெல்லாம் பின்னால் நின்றவர்களை நிச்சயம் அல்லாஹ் தண்டிப்பான் என்ற உறுதியான நம்பிக்கை நமக்குள்ளது. எனவே, அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் இறுதி வெற்றி எமக்குக் கிடைக்கும்

அந்த விதவைப் பெண்களின் கண்ணீரும், அனாதைகளாக்கப்பட்ட அரும்புகளின் ஏக்கமும் நிச்சயமாக இவர்களை ஒரு நாள் எரித்துப் போடும். அங்கு தொழுகைக்காகக் கூடிய நூற்றுக் கணக்கான மக்களின் அழுகையும், சாபமும் இவர்களுக்கு இவ்வுலகத்திலேயே அல்லாஹ்வின் தண்டனையைப் பெற்றுக் கொடுக்கும் என்பதில் அல்லாஹ்வை நம்பிய எமக்கு நம்பிக்கையுண்டு!

இவ்வேளையில் பாரபட்சமாக நடந்த மடவளை பள்ளி நிர்வாகிகளும் வத்தேகம பொலிஸ் அதிகாரிகளையும், அநியாயத்திற்குத் துணை நின்ற ஆன்மிக(?)-அரசியல் தலைமைகளையும்,  நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இன்ஷா அல்லாஹ்! இவர்களின் இந்த அக்கிரமம் மடவளை பகுதியில் ஏகத்துவ எழுச்சிக்கும், அசத்தியத்தின்  வீழ்ச்சிக்கும் வழி வகுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

நன்றி: முஸ்ஸம்மில் நிஸ்தார்
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved