Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

தந்தையின் அமைச்சுக்கு எதிராக மகன் புகார்

Published on Thursday, May 26, 2016 | 7:55 PM

சுகாதார அமைச்சின் வைத்திய விநியோகப் பிரிவின் கட்டுப்பாட்டிலுள்ள ஓளடத களஞ்சியசாலை வெள்ள அனர்த்தத்திற்குட்பட்டுள்ளமை தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்க வேண்டுமென ஜனநாயக தேசிய இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சத்துர சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கொட்டிகாவத்தை இலக்கம் 03இல் உள்ள ஓளடத களஞ்சியசாலையில் 400 மில்லியன் ரூபா பெறுமதியான ஓளடதங்கள் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
எனினும் இவ்வாறானதொரு இடத்தில் ஓளடத களஞ்சியசாலையொன்றை நடத்தி செல்லும் உரிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, வெள்ள அனர்த்தத்திற்கு முன்னதாகவே இந்த ஓளடதங்களை அப்புறப்படுத்தாமை தொடர்பாகவும் ஆராய்ந்து பார்க்க வேண்டுமென்றும் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் 2004ஆம் ஆண்டிலும் இவ்வாறாக அதிகளவிலான ஓளடதங்களை வேண்டுமென்றே வீணாக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாகவும் தற்போதும் அதே நிலையிலான நடவடிக்கையே எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved