Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

கிழக்கு முதல்வர் விவகாரம் : ஜனாதிபதி – பிரதமருக்கிடையில் சந்திப்பு

Bublished By Online Ceylon on Tuesday, May 31, 2016 | 6:58 AM

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கடற்படை அதிகாரி ஒருவரிடம் நடந்துகொண்ட விதம் அரசியல் மேடையில் இன்று பலவாறு பேசப்பட்டு வரும் நிலையில், இவ்விடயம் குறித்து ஆராய ஜனாதிபதியும் பிரதமரும் விசேடமாக சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது தென்கொரியாவில் நடைபெற்று வரும் ரோட்டறி கழக மாநாட்டில் பிரதமர் கலந்துகொண்டுள்ள நிலையில், அவர் நாடு திரும்பியதும் இச் சந்திப்பு இடம்பெறுமென தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் சம்பூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்பேது, கிழக்கு முதல்வர் மேடையேற முற்பட்டபோது, கடற்படை அதிகாரி ஒருவர் அவரை தடுத்து நிறுத்தியதால் ஆவேசப்பட்ட கிழக்கு முதல்வர் அவரிடம் சற்று கடுமையான தொனியில் பேசினார். இவ்விடயம் பல விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது. அதனையடுத்து பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்ட விசாரணையின் பின்னர், கிழக்கு முதல்வர் பங்கேற்கும் எந்தவொரு நிகழ்விலும் முப்படையிரின் ஒத்துழைப்பை வழங்க வேண்டாமென, பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முப்படைத் தளங்களுக்கு பிரவேசிப்பதற்கும் கிழக்கு முதல்வருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனை பெறப்படாமல் விதிக்கப்பட்ட இந்த உத்தரவு, இராஜதந்திர வட்டாரங்களில் பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்க தரப்பில் இவ்விடயம் குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கப்படாத நிலையில், பிரதமரும் ஜனாதிபதியும் இவ்விடயம் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved