Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

வெள்ள அனர்த்தத்திற்கு காணி விற்பனையாளர்களே பொறுப்பேற்க வேண்டும்

Bublished By Online Ceylon on Thursday, May 26, 2016 | 7:33 PM

அண்மையில் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் சேற்று நிலங்கள் மற்றும் ஆறுகளைச் சூழவுள்ள நிலங்களை நிரப்பி மக்கள் வசிப்பிடங்களாக மாற்றியமையே இடம்பெற்ற பாரிய வெள்ள அனர்த்தத்திற்கு பிரதான காரணமாக கூறப்படுவதாக கருத்துக் கணிப்பொன்றில் ஈடுபட்ட சபரகமுவ பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய கருத்துக் கணிப்புக் குழுவொன்று உறுதி செய்துள்ளது.
மேற்படி இக்குழுவானது இவ்வெள்ள அனர்த்தத்திற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே கொழும்பு மற்றும் அதனை யண்டிய பிரதேசங்களில் இது தொடர்பாக விசாரணைகளை நடத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதன்படி, இவர்களால் சேகரிக்கப்பட்ட தரவுகளை எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அறிக்கையொன்றாக சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த அரசின் காலத்தில் அரசியல் பலவந்தர்கள் மூலம் கட்டாயப்படுத்தி சேற்று நிலங்களில் மற்றும் ஆறுகளை அண்மித்த நிலப்பரப்பில் இந்த நிரப்புதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு சேற்று நிலங்களை மற்றும் ஆறுகளை அண்டிய நிலங்களை நிரப்பி அதனை மக்களின் வாழ்விடமாக மாற்றுவதற்கு காணிகளை துண்டாக்கி விற்கும் காணி விற்பனை நிலையங்கள் தமது அபரிமிதமான ஒத்துழைப்பை வழங்கியதாகவும் இவ்விசாரணைகளின்போது வெளிவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்குறித்த கருத்துக் கணிப்பில் குறித்த சேற்று நிலங்களை நிரப்பி அல்லது வேறு விதமாக காணிகளை துண்டாக்கி விற்பனை செய்த காணி விற்பனை நிறுவனங்கள் மூலம் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திற்காக சட்ட ரீதியாக நட்டஈடு பெறக்கூடிய வழிகள் இருக்கின்றதா என தேடிப்பார்ப்பதே இக்குழுவின் எதிர்கால நோக்கமென கூறப்படுகிறது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved