Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

கம்யூனிஸ்ட் தலைவரின் வீட்டில் மகனின் எலும்புகூடுகள்! தந்தை கொடுத்த பதிலடி

Bublished By Online Ceylon on Thursday, May 26, 2016 | 7:41 PM

மேற்கு வங்கத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்றிற்கு வழக்கு விசாரணைக்காக வந்த சிபிஐ-எம் தலைவர் சுசந்தா கோஷ்சை மர்ம நபர் ஒருவர் அறைந்ததால் பரபரப்பு எற்பட்டது.
மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தின் பென் சாப்ரா கிராமத்தில் உள்ள கோஷின் பரம்பரை வீட்டிற்கு அருகே எட்டு எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன, இச்சம்பவம் தொடர்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு சுசந்தா கோஷ் கைது செய்யப்ட்டுள்ளார்.
பின்னர், உச்சநீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியுள்ளது. இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்காக கோஷ் நீதிமன்றம் வந்துள்ளார்.
விசாரணைக்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்து கொண்டிருந்த போது,கோஷ்சை திடீரென ஒரு நபர் அறைந்துள்ளார். மர்ம நபரை தடுத்த பொலிலிசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதில், தான் பெயர் மனோரஞ்சன் சிங் என தெரிவித்த நபர், சில ஆண்டுகளுக்கு முன் தன் மகன் ஸ்வபன் சிங் காணாமல் போனார்.
அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், கோஷ் வீட்டில் தோண்டி எடுக்கப்பட்ட எட்டு எலும்புக்கூடுகளில் தன் மகனின் எலும்புக்கூடும் ஒன்று என எனக்கு தெரியவந்தது, எனவே தான் அவரை தாக்கினேன் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த வழக்கில் அவருக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் சதி செய்வதாக கோஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved