Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

காய்ச்சலுக்கு சர்ஜிகல் ஸ்பிரிட்டை மருந்தாக கொடுத்த வைத்தியர் - மனிக்ஹின்னையில் சம்பவம்

Bublished By Online Ceylon on Tuesday, May 31, 2016 | 7:26 AM

மனிக்ஹின்னை உரிகடுவ பிரதேசத்தில் தனியார் வைத்தியசாலையொன்றில் நேற்று காய்ச்சல் காரணமாக  சிகிச்சைக்காக சென்றிருந்த மூன்றரை வயதுடைய குழந்தைக்கு காயங்களை சுத்தப்படுத்துவதற்காகப் பயன்படும்சர்ஜிகல் ஸ்பிரிட்டை வழங்கிய சம்பவமொன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையின் தாயார், நேற்று முன்தினம் (29) மாலை தனது குழந்தை அதிக காய்ச்சலால் அவதியுற்றிருந்த நிலையில் குறித்த தனியார் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.
மனிக்ஹின்னை மாவட்ட வைத்தியசாலையில் பணி புரியும் பெண் வைத்தியர் ஒருவரே வைத்தியசாலையில் இருந்துள்ளதாகவும் இவராலேயே தன் குழந்தைக்கு குறித்த மருந்து தரப்பட்டதாகவும் தாயார் வசந்த குமாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக குழந்தையின் தாயார் மனிக்ஹின்னை பிரதேச பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளதாகவும், அது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved