Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

முரளிதரனிடம் ஆலோசனை.. இலங்கையில் சாதனை படைக்க காத்திருக்கும் நாதன் லயன்

Bublished By Online Ceylon on Friday, May 27, 2016 | 7:14 AM

அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன், இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அசத்த முத்தையா முரளிதரனிடம் பந்துவீச்சு ஆலோசனைகளை பெற முடிவு செய்துள்ளார்.
எதிர்வரும் யூலை மாதம் அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. இதில் சிறப்பாக செயல்பட முத்தையா முரளிதரனின் உதவியை நாடியுள்ளார் நாதன் லயன்.
இது குறித்து அவர் கூறுகையில், இந்திய துணைக் கண்டத்தில் எப்படிபந்து வீச வேண்டும் என்று முரளி எனக்கு தெரிவித்துள்ளார்.
அவரிடம் பயிற்சி பெற காத்திருக்கிறேன். அவரிடம் பயிற்சி பெற முடிந்தால் அது களத்தில் சாதிக்க உதவியாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
2011ம் ஆண்டு காலி சர்வதேச மைதானத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான நாதன் லயன் தற்போது வரை 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மேலும், டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்த அவருக்கு இன்னும் 5 விக்கெட்டுகளே தேவை என்ற நிலையில், இந்த மைல்கல்லை எட்டும் முதல் அவுஸ்திரேலிய சுழற்பந்து வீரர் என்ற பெருமையை பெற ஆவலுடன் உள்ளார்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved