Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

வடக்கிலுள்ள காணிகளை மீளக் கையளிக்காவிட்டால் மீண்டும் யுத்தம் ஏற்படலாம் : ஜனாதிபதி

Bublished By Online Ceylon on Monday, May 30, 2016 | 8:49 AM

வடக்கிலுள்ள மக்களுக்குச் சொந்தமான காணிகளை மீள கையளிக்காமல் தொடர்ந்தும் பிடித்து வைத்திருந்தால், எதிர்காலத்தில் மீண்டும் ஒரு யுத்தத்திற்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதற்காகவே தாம் காணிகளை கையளிக்குமாறு தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
ஜீ7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி, அங்கு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
தாம் வடக்கிற்கு சென்றபோது அங்குள்ள கிணறுகள் கட்டப்பட்ட விதத்தைப் பார்த்து, அங்குள்ள மக்கள் எந்தளவு சிறப்பாக வாழ்ந்துள்ளனர் என்பதை புரிந்துகொண்டதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அம் மக்கள் தமது மண்ணை மிகவும் நேசிப்பதாகவும், அவற்றை கையளிக்கவேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
அத்தோடு, அண்மையில் கையளிக்கப்பட்ட நடேஸ்வரா கல்லூரி பற்றியும் குறிப்பிட்ட ஜனாதிபதி, உண்மையில் யுத்தம் நிறைவடைந்த உடனேயே குறித்த பாடசாலை உள்ளிட்ட இடங்கள் கையளிக்கப்பட்டிருக்க வேண்டுமென சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, வடக்கில் தொடர்ந்தும் இராணுவ முகாம்கள் இருக்கும்வரை, சர்வதேசத்தின் அழுத்தமும் தொடர்ந்தவண்ணமே இருக்குமென்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved