Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

நுவரெலியாவில் நசீர் அஹ்மட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Bublished By Online Ceylon on Saturday, May 28, 2016 | 5:42 PM

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட் கடற்படை அதிகாரி ஒருவரிடம் தரக்குறைவாக நடந்துக்கொண்டமைக்கு எதிராக நுவரெலியா நகரசபை வளாகத்தில் இன்று -28- எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது பொதுமக்கள் மதகுருமார்கள் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

இதன்போது கடற்படை அதிகாரியிடம் தரக்குறைவாக நடந்தமைக்கு முதலமைச்சருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது படையினருக்கு மரியாதை செலுத்தும் வகையில், “யுத்த வெற்றி வீரர்களை பாதுகாப்போம்'  போன்ற பல பதாதைகளை ஏந்தியிருந்தனர். அத்துடன் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராகவும் பதாதைகள் ஏந்தப்பட்டிருந்தன.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved