Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

கிருமிநாசிகளுக்குப் பதிலாக வாத்துக்களை பயன்படுத்தம் தென்ஆபிரிக்கா

Bublished By Online Ceylon on Monday, May 30, 2016 | 9:22 AM

உற்பத்திப் பொருட்கள் அனைத்திலுமே இரசாயனங்கள் கலந்துவிட்டதாக நாம் அங்கலாய்க்கும் தற்போதைய சூழ்நிலையில், தென்ஆபிரிக்காவில், வைன் உற்பத்தி நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான திராட்சைத் தோட்டத்தில், காணப்படும் நத்தைகள் மற்றும் ஏனைய பூச்சிகளை வேட்டையாடுவதற்கு வாத்துக்கள் பயன்படுத்தப்படுவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பொதுவாக தோட்டங்களில் பூச்சிகள் மற்றும் புழுக்களின் தொல்லைகள் காணப்படுவதனால் அவற்றை அழிப்பதற்கு செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட இரசாயன கிருமி நாசினிகளே பயன்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில் தான், தென் ஆபிரிக்காவின், Vergenoegd பிராந்தியத்தில் உள்ள திராட்சைத் தோட்டத்தில், காணப்படும் நத்தைகள் மற்றும் பூச்சிகளை உணவாகக் கொள்வதற்கு ஒவ்வொரு நாட்களும் காலை 9.45 அளவில் ஆயிரக்கணக்கிலான இந்திய ரன்னர் வாத்துக்கள் திறந்து விடப்படுகின்றன.
இவை தோட்டத்தில் அரும்பி வரும் சிறிய கொடிகள் மற்றும் மணல்வெளியில் காணப்படும் நத்தைகளை உணவாக உட்கொள்வதால், பயிற்கள் சேதமற்ற வகையில் சிறப்பாக வளர்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு, வேறு வகையான விலங்கு வளர்க்கப்பட்டால் அவை தோட்டத்தில் வேகமாக ஓடிச் செல்லும் என்பதால் பயிற்கள் நாசமாவதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாகவும். இதேவேளை, வாத்துக்கள் அமைதியாக நடப்பவை என்பதால் அவையே இதற்கு பொறுத்தமானதாக இருப்பதாகவும் தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறான போதும், அயிரக்கணக்கிலான வாத்துக்களை வளர்ப்பதற்கு அதிக தொகை செலவாவதாகவும் ஆனபோதும், இரசாயன களைக்கொல்லிகளை பயன்படுத்தாது விலங்குகளை வைத்தே தோட்டத்தினை பேணுவது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved