10ம் வகுப்பு மாணவியை மது அருந்த வைத்து பலாத்காரம் செய்த நண்பர்கள் !

மும்பை: மும்பையில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் அவரது சக தோழர்களாலேயே பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கோப்ரி என்ற இடத்தில் செப்டம்பர் 30 ஆம் தேதியன்று இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. அச்சிறுமியின் இரண்டு நண்பர்கள் அவரை பிறந்தநாள் பார்ட்டி என்று அழைத்துச் சென்று, வற்புறுத்தி மது அருந்த வைத்துள்ளனர்.

மயக்கமடைந்த அவரை அடித்து, காயப்படுத்தி அம்மாணவர்கள் பலாத்காரம் செய்துள்ளனர். அதில் முக்கிய குற்றவாளியானவன் 15 வயதே நிரம்பியவன் என்பது குறிப்பிடத்தக்கது.

அவன் தன்னுடைய பிறந்தநாள் என்று கூறி அம்மாணவியை தனது வீட்டுக்கு அழைத்துள்ளான்.

அவனது வீட்டில் அவன் தங்கையும், மற்றொரு நண்பனும் இருந்துள்ளனர். அங்கு சென்றதும் மது அருந்தி மயக்கடைந்த மாணவியை அவர்கள் இருவரும் நாசம் செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, அக்டோபர் 10 ஆம் தேதி வரையில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து விசாரணை அதிகாரியான சதன் இங்க்லே, "குற்றவாளிகளும், பாதிக்கப்பட்ட சிறுமியும் மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சோதனை முடிவுகள் வந்ததும் முறையான விசாரணை துவங்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.