இலங்கை பந்துவீச்சு சொதப்பல் : 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி

இங்கிலாந்து- இலங்கை மோதிய இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றியை பதிவு செய்துள்ளது இங்கிலாந்து. இரு அணிகளும் மோதிய போட்டி பிர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய பெரேரா (37) மற்றும் குணதிலக(22) ஆகியோர் நல்ல தொடக்கத்தை அளித்தனர். அதிகபட்சமாக தரங்கா 53 ஓட்டங்களும் சந்திமால் 52 ஓட்டங்களும் குவித்தனர். அணியின் தலைவர் மேத்யூஸ் 54 பந்துகளை சந்தித்து 44 ஓட்டங்கள் குவித்தார். 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 254 ஓட்டங்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் Plunkett மற்றும் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 255 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 34.1 ஒவர்களில் விக்கெட் இழப்பின்றி 256 ஓட்டங்கள் குவித்து வெற்றியை பதிவு செய்தது. இங்கிலாந்து தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய Roy 95 பந்துகளில் 112 ஓட்டங்கள் குவித்தார். Hales 110 பந்துகளை சந்தித்து 133 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றிக்கு இட்டுச்சென்றார். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.
News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.