Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

தாய்லாந்து பெண்ணொருவர் உள்ளிட்ட 12 பேர் கைது

Bublished By Online Ceylon on Wednesday, June 1, 2016 | 6:54 AM

தலவதுகொடை பிரதேசத்தில் இருந்து தாய்லாந்து பெண்ணொருவர் உள்ளிட்ட பன்னிரண்டு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தலவதுகொடை பிரதேசத்தில் உள்ள ஆடம்பர வீடொன்றின் மூன்றாம் மாடியில், பாலியல் தொழில்விடுதி நடப்பதாக பாணந்துறை மோசடித் தவிர்ப்புப் பிரிவிற்குக் கிடைத்த தகவலையடுத்து நடைபெற்ற விசேட சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் முகாமையாளராக கடமையாற்றிய பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் விடுதியொன்றை நடத்தி வருவதற்காக குறித்த கட்டிடத்தின் மூன்றாம் மாடி அறுபதினாயிரம் ரூபா மாதவாடகைக்குப் பெறப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை நாளை கடுவெலை நீதிமன்றத்தில் முன்னிறுத்தவுள்ளதாக பாணந்துறை மோசடித் தடுப்புப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved