13 வயது மாணவனால் கர்ப்பமாகிய பள்ளி ஆசிரியை


அமெரிக்காவில் 13 வயது மாணவனால் கர்ப்பமாகிய பள்ளி ஆசிரியை, குழந்தை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்ய பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஹாஸ்டன் நகரை சேர்ந்த பள்ளி ஆசிரியை மீது இக்குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஸ்டொவல்லா நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வருபவர் 24 வயதான அலெக்சாண்டிரியா வேரா. இவர் அதே பள்ளியில் 8ம் வகுப்பு படித்துவந்த மாணவனுடன் பாலியல் உறவு கொண்டதால் கர்ப்பமானதாக கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் இதுதொடர்பாக பல கேள்விகளை சந்தித்த வேரா கர்ப்பத்தை கலைத்துள்ளார். இந்நிலையில், இதுதொடர்பாக டெக்சாஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 13 வயது மாணவனை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஸ்டொவல்லா நடுநிலைப்பள்ளியில் விசாரித்த போது ஆசிரியையை குறித்து மாணவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர். மாணவர்கள் பள்ளியறையில் செல்போன் உபயோகப்படுத்துவதை அவர் ஊக்கப்படுத்தியதாகவும் சில மாணவர்கள் குற்றம்சாட்டினர். மாணவன் ஒருவருடன் ஆசிரியைக்கு தொடர்பு இருந்தது தங்களுக்கு தெரிந்திருந்ததாக பல மாணவர்கள் கூறியுள்ளனர்.

விசாரணையின் போது, மாணவனின் குடும்பத்திற்கு தெரிந்தே தான் பழகியதாகவும், மாணவன் தன்னை பெற்றோரிடம் பெண்தோழி என்றே அறிமுகம் செய்ததாகவும், பல்வேறு குடும்ப நிகழ்வுகளில் தான் பங்கேற்றதாகவும் வேரா குறிப்பிட்டுள்ளார். தாங்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் விசாரணைக்கு ஆஜரான பள்ளி ஆசிரியை அலெக்சாண்டிரியா வேரா 1 லட்சம் டாலர் பிணை தொகையில் ஜாமீனில் வெளிவந்துள்ளார். 

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சமூகநல ஆர்வலர்கள், மாணவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பல்வேறு வடிவங்களில் நெருங்கியவர்களாலேயே நடைபெற்று வருவதாகவும், இதனை பெற்றோர் தடுப்பதற்கான உரிய கவனத்தை செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.