கர்ப்பிணி பெண்களை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தால் 1500 ரூ ரொக்கப் பரிசு..!

ஒடிசா மாநிலத்தில் கர்ப்பிணிப் பெண்களை முறையாக ஆஸ்பத்திரியில் அனுமதித்து மகப்பேறு பார்ப்பதில் அங்குள்ள மக்களிடம் நாட்டம் குறைந்து வருகிறது.

வீட்டிலேயே மருத்துவச்சிகளை வைத்து பிரசவம் பார்க்க முயன்று, உயிருக்கு ஆபத்தான நிலையில் கர்ப்பிணிகளை ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து வருவதால், பல நிகழ்வுகளில் தாய் மற்றும் சேயின் உயிர்களை காப்பாற்ற இயலாமல் போகிறது.

இந்த நிலையை மாற்றி, அரசு ஆஸ்பத்திரிகளில் பாதுகாப்பான முறையில் பிரசவம் நடப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இங்குள்ள கோராபுட் மாவட்ட கலெக்டர் ஜெயகுமார் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரசவத்துக்காக கர்ப்பிணி பெண்களை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வருபவர்களுக்கு ரூ.1500 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ள கலெக்டர் ஜெயகுமார், இதன்மூலம் இளம்சிசுக்கள் மற்றும் கர்ப்பிணிகளின் இறப்பு எண்ணிக்கை வெகுவாக குறையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.