போர் கப்பலில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி !

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர் கப்பலில் விஷவாயு தாக்கி 2 பேர் பலியாகினர்.

விஷ வாயு தாக்கியதால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகா மாநிலம் கார்வாரில் உள்ள கடற்படை தளத்தில் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர் கப்பலுக்கான பராமரிப்புப் பணிகள் இம்மாதம் 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கப்பலின் கழிவுநீர் செல்லும் பாதை சுத்தம் செய்யப்பட்டுக்கொண்டிருந்தபோது, விஷ வாயு தாக்கி பணியில் இருந்த இருவர் உயிரிழந்தனர்.

விஷ வாயுவை சுவாசித்ததால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல் நிலை தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர் கப்பல் இந்தியாவின் மிகப்பெரிய போர் கப்பல் என்பதும், பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்ட மிக முக்கிய போர் ஆயுதங்கள் இவற்றில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.