பொசன் போயா தினத்தினை முன்னிட்டு 200 விபசாரிகள்..!

பொசன் போயா தினத்தினை முன்னிட்டு அநுராதபுரத்துக்கு வருபவர்களை இலக்கு வைத்து புறநகர் பகுதிகளிலும் நகரின் பல பிரதேசங்களிலும் இடம்பெற்றுவரும் விபச்சார செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பல்வேறு பாகங்களிலுமிருந்து அனுராதபுரத்துக்கு வருகை தந்துள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட விலைமாதுகள் தற்போது நகரினை அண்டியுள்ள பகுதிகளிலுள்ள விடுதிகள், வாடிவீடுகளில் தங்கியிருப்பதாகவும் இவ்வாறான விடுதிகள் மற்றும் வாடிவீடுகளின் உரிமையாளர்களின் பட்டியலில் பெரும்பாலும் அரசியல் பிரமுகர்கள் உள்ளடங்குவதாக புலனாய்வு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய விடுதிகளில் நீண்டகாலமாக பணியாற்றி வந்த அனுபவம் மிக்க பணிப்பெண்களை வேலையிலிருந்து நிறுத்திய குறித்த விடுதிகளின் உரிமையாளர்களால், தூரபிரதேசங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள விலைமாதுகள் அப்பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளமையால் அதிருப்பதியடைந்த முன்னாள் பணியாளர்கள் இது தொடர்பில் கருத்து தெரிவித்துவருகின்ற நிலையில் அவர்களிடமிருந்து இவ்விலைமாதுகள் தொடர்பில் தகவல்களை பெற முடியுமானதாக இருந்ததாக பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விபசாரம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படும் விடுதிகளை முற்றுகையிடும் நோக்குடன் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.