Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

21 வயது இளைஞனால் 15வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- திடுக்கிடும் வாக்கு மூலம்..!

Published on Tuesday, June 21, 2016 | 7:02 AM

கிளிநொச்சியில், இளைஞர் ஒருவர் 15 வயதுச் சிறுமி ஒருவருடன் வைத்திருந்த, பாலியல் உறவினால் அந்த சிறுமி கர்பமாகி உள்ளதாக வைத்தியசாலைப் பரிசோதனைகள் உறுதிப்படுத்தி உள்ளன.

கிளிநொச்சி கரடிபோக்கு சந்திக்கருகில் அமைந்துள்ள, யாழ் தினசரிப் பத்திரிகை ஒன்றின் மாவட்ட அலுவலகத்தின் பணியாளர் தங்கும் விடுதியில், இந்த பாலியல் துஸ்பிரயோக சம்பவம் இடபெற்றுள்ளதாக, சிறுமியின் வாக்கு மூலத்தின் வாயிலாக கண்டறியப்பட்டு உள்ளது.

இவ்வருடம் பெப்ரவரி மாதம், குறித்த பதினைந்து வயது சிறுமியை, இரவு முழுவதும் தன்னுடன் வைத்திருந்ததாக, இவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு உள்ளன.

இதனை அடுத்து, இந்தப் பாலியல் பலாத்காரத்தில் (சிறுவர்கள் அவர்களின் விருப்பத்திற்கிணங்க, வயது வந்தவர்களுடன் வைத்திருக்கும் உறவுகளும், பாலியல் பலாத்காரமாகவே கருதப்படுகிறது) கர்ப்பமாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் அந்த ஊடக நிறுவனத்தின் விநியோக பணியில் ஈடுபட்ட பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டு உள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
கடந்த 14-06-2016 செவ்வாய் கிழமை மாலை கிளிநொச்சி பொலீஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவு பொலீஸார் 21 வயதுடைய முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவு தேவிபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை அழைப்பித்து சந்தேகத்தின் பெயரில் கைது செய்கின்றனர்.

மறுநாள் புதன் கிழமை குறித்த இளைஞன் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் படுகின்றார். நீதி மன்றம் அவருக்கு இம்மாதம் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கமாறு உத்தரவு பிறப்பிக்கிறது.

பெற்றோரை இழந்த கிளிநொச்சி தர்மபுரத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை கடந்த 2016 பெப்ரவரி மாதம் தான் பணியாற்றுகின்ற நிறுவனத்தின் விடுதியில் வைத்து பாலியல் உறவு கொண்டு அவரை கர்ப்பமாக்கினார், என்ற சந்தேகத்தின் பேரில் இந்த இளைஞன் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி சம்பவம் இடம்பெறுகின்ற போது பதினைந்து வயது என்றும் தற்போது அவர் ஜந்துமாத கர்ப்பிணியாக உள்ளதாகவும் பொலீஸார் கூறுகின்றனர்.

இந்த பாலியல் துஸ்பிரயோக சம்பவத்துடன், தொடர்புடைய இளைஞன் யார்? அவர் என்ன வேலை செய்கின்றவர்? எங்கு தங்கி நிற்கின்றவர்? சிறுமிக்கும் அவருக்கும் எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது? ஜந்து மாதம் வரை சிறுமி ஏன் தனக்கு ஏற்பட்ட சம்பவத்தை வெளியில் கூறவில்லை? ஒரு சிறுவர் பாலியல் துஸ்பிரயோகத்தை ஏன் வழமை போன்று ஊடகங்கள் பெரிதுபடுத்தி செய்திடலை மேற் கொள்ளவில்லை என பல்வேறு கேள்விகள் எழ நாமும் குறித்த சம்பவத்தை ஆராய முற்பட்ட போது எமக்கு கிடைத்த சில தகவல்கள் இவை.

பெற்றோரை இழந்த குறித்த சிறுமி கிளிநொச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்த மற்றும் பாராமரிப்பு நிலையம் ஒன்றில் வசித்து வந்துள்ள நிலையில் அவர் 2015-12-08 அன்று குறித்த நிலையத்தில் இருந்து தப்பி வெளியில் சென்றுள்ளார்.

இவ்வாறு வெளியில் சென்ற சிறுமியையே பரந்தன் சந்தியிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து தான் பணியாற்றுகின்ற நிறுவனத்தின் அறையில் வைத்து அவருடன் பாலியல் உறவு கொண்டு கர்ப்பமாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய 21 வயதுடைய இளைஞர், கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தினமும் யாழ்ப்பாணத்தில் இருந்து உதயமாகின்ற பத்திரிகை ஒன்றின் கிளிநொச்சி அலுவலகத்ததில் இருந்து விநியோக பணியில் ஈடுப்பட்டவர். இப்பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகத்தின் பின்புறமாக ஜந்து அறைகளைகொண்ட பணியாளர் விடுதி ஒன்றுள்ளது. இதில் முதலாவது அறையில் குறித்த இளைஞன் தங்கியிருப்பது வழக்கம்.
இந்த அறையிலேயே கடந்த பெப்ரவரி மாதம் குறித்த சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.
பரந்தன் சந்தியில் நின்ற தன்னை இளைஞன் உந்துருளியில் அழைத்துச் சென்று, பாலியல் உறவுகொண்டதாக சிறுமி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தன்னை தொலைபேசி மூலம் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தாகவும் சம்பவத்தை வெளியில் சொன்னால் குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை பேஸ்புக் மற்றும் இணையத் தளங்களில் பதிவேற்றி விடுவதாக எச்சரித்தமையினாலும் இதுவரைக்கும் வெளியில் கூறவில்லை என்றும் சிறுமி மேலும் தெரிவித்துள்ளார். ஆனால் தான் அவ்வாறு எதனையும் செய்ய வில்லை என அந்த இளைஞர் மறுக்கின்றார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கெனவே ஒரு வழக்கு நீதிமன்றில் இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார் என்பதனை நீதிமன்றில் தனியாக வைத்து விசாரித்த போதே நீதியாளரிடம் நடந்த சம்பவத்தை, சிறுமி தெரிவித்துள்ளார்.

தான் பரந்தன் சந்தியில் இருந்து அழைத்து செல்லப்பட்டதனையும், கரடிபோக்குச் சந்திக்கருகில் உள்ள பத்திரிகை அலுவலகத்தின் விடுதிக்குள் வைத்து தன்னோடு பாலியல் உறவு கொண்டதனையும் அவரின் பெயரையும், தெரிவித்துள்ளார்.

இதன் பின்னரே விடயம் வெளிச்சத்திற்கு வந்தது ஆனால் ஏனைய விடயங்கள் போன்று வெளியில் வரவில்லை.
இதேவேளை இந்தச் சிறுமி ஏற்கனவே ஒரு இளைஞனை காதலித்ததாகவும், அவருடன் சில நாட்கள் இருந்ததாகவும், அவரால் கைவிடப்பட்ட நிலையில் பொலீஸார் சிறுமியை மீடடு வைத்தியசாலையில் அனுமதித்து இருந்தனர். பின்னர் மருத்துவ பரிசோதனையின் போது, சிறுமி கர்ப்பம் அடைய வில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டு அவர் சிறுவர் நன்நடத்தை நிலையம் ஒன்றில் பொலீஸரால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கிருந்த சிறுமி கடந்த வருடம் மார்கழி மாதம் எட்டாம் திகதி எவருக்கும் தெரியாமல் வெளியேறிவிட்டார்.
இதன் பின்னரே இந்தச் சிறுமி, மேற்படி ஊடக நிறுவனத்தின் பணியாளரால் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமாக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சந்தேகத்தின் பெயரில் சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

நண்பர்களுக்கு பகிரவும் :

0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved