புகையிரதத்தில் பயணசீட்டு இன்றி பயணித்தவர்களால் இவ்வளவு வருமானம்

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் தொடக்கம் மே மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் புகையிரத்தில் பயணசீட்டு இன்றி பயணித்தவர்களால் 77 இலட்சத்துக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளதாக புகையிரத திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் புகையிரதங்களில் பயணச்சீட்டு இல்லாதவர்களை தேடும் சுற்றிவளைப்பை புகையிரத பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
திடீர் சுற்றிவளைப்புகளை புகையிரதங்களில் மேற்கொண்ட சந்தர்ப்பங்களில் அனுமதிச் சீட்டு இன்றி பயணித்த 5417 பேரை கைதுசெய்துள்ளதாக புகையிரத பிரதி கண்காணிப்பாளரான எஸ்.ஏ.ஆர்.அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பு, நாவலப்பிட்டி, அநுராதபுரம் ஆகிய புகையிரத வலையங்களை மையப்படுத்தி சுற்றிவளைப்புகளை மேற்கொண்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.