கட்டட நிர்மாணங்களுக்கான, செலவீனம் 3 வீதத்தால் உயர்டையும் சாத்தியம்

சீமெந்தின் விலை அதிகரித்துள்ளதை அடுத்து, கட்டட நிர்மாணங்களுக்கான செலவீனமும் சுமார் 3 வீதத்தால் உயர்வடையுமென மொரட்டுவை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஆயினும், நிர்மாணத்துறையில் வீழ்ச்சி ஏற்பட மாட்டாதென பல்கலைக்கழக வாஸ்து சாஸ்திரவியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் லலித் டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

சீமெந்து விலை அதிகரித்துள்ளமையால் நிர்மாணப் பணிகளில் மந்த நிலை ஏற்படலாம் என்றும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து வகையான விற்பனை நாமங்களின் கீழ் உற்பத்தி செய்யப்படும் 50 கிலோகிராம் நிறையுடைய ஒரு மூடை சீமெந்தின் விலையை 60 ரூபாவால் அதிகரிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இதன் பிரகாரம், கடந்த முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் 870 ரூபாவாக நிலவிய ஒரு மூடை சீமெந்தின் விலை 930 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி திகதி ஜூன் மாதம் முதலாம் திகதி எனக் குறிப்பிடப்பட்டுள்ள சீமெந்து மூடைகளை மாத்திரமே 930 ரூபாவிற்கு விற்பனை செய்யமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்னைய திகதி குறிப்பிடப்பட்டுள்ள சீமெந்து மூடைகளின் விலையை அதிகரிக்கின்ற விற்பனையாளர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.