பொறியியலாளர்கா ஷிப்லி பாறுக்கின் முயற்சியினால் காத்தான்குடி கடலில் நீராடுவதற்குத்தடை

தொடர்ச்சியாக காலத்திற்கு காலம் காத்தான்குடி கடற்கடலில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து வருபவர்கள் நீராடுவதற்காக கடலுக்கு செல்லும்போது ஓரிருவர் மரணமடையும் நிலை தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதனை கருத்தில் கொண்ட கிழக்கு  மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸ்ஸம்மில் மற்றும் ஏப்ரல் மாதம் நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் ”இக்கடல் ஆழமானது இங்கு நீராடுவது தடை செய்யப்பட்டுள்ளது” எனும் வார்த்தைகளை கொண்ட எச்சரிக்கை பதாகையினை காத்தான்குடி கடற்கரை பகுதியில் இடுமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக அறிவிப்பு பதாதைகள் 2016.06.16ஆந்திகதி (வியாழக்கிழமை) இடப்பட்டன.

இந்நடவடிக்கையை பொறியியலாளர் ஷிப்லி பாரூக் அவர்கள் மேற்கொன்டதன் மூலம் வருங்காலங்களில் பெறுமதி மிக்க உயிர்கள் கடற்கரையில் கடலின் தன்மை பற்றி அறியாமல் குளிப்பதற்காக சென்று உயிரைவிடும் சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

இந்நடவடிக்கையை மேற்கொள்ள முயற்சிகளை மேற்கொண்ட பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கிக்கு   காத்தான்குடி மக்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

M.T. ஹைதர் அலி

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.