பேஸ்புக் காதலால் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை..!

இந்தியா ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் காதிப்பேட்டை பஸ் நிலையத்தில் டீக்கடை நடத்தி வருபவர் ரமேஷ் (33). இவர் பேஸ் புக்கில் செட்டிங் செய்வது வழக்கம்.

கடந்த சில மாதத்துக்கு முன்பு விசாகப்பட்டினத்தை சேர்ந்த பெண் ஒருவர் பேஸ் புக்கில் ரமேசுக்கு அறிமுகம் ஆனார்.

பின்னர் இருவரும் செல்போனில் பேச தொடங்கினார்கள். அந்த பெண்ணின் பேச்சில் ரமேஷ் மயங்கினார்.

இந்த நிலையில் ரமேசிடம் அந்த பெண் தான் கஷ்டத்தில் இருப்பதாகவும் பணம் கடனாக தருமாறு கூறினாள்.

உடனே ரமேஷ் முகத்தை கூட பார்க்காத அந்த பெண்ணின் வங்கி கணக்கில் கடந்த 6ஆம் திகதி முதல் பணம் போட்டு வந்தார்.

சுமார் ரூ.10 லட்சம் வரை கொடுத்தார். இதுபற்றி அறிந்த ரமேசின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

முகம் தெரியாத பெண்ணுக்கு எப்படி ரூ. 10 லட்சம் வரை கொடுத்தாய் என்று அவரை கண்டித்தனர். உடனே பணத்தை திரும்ப வாங்கும்படி கூறினார்கள்.

இதையடுத்து ரமேஷ் அந்த பெண்ணுக்கு போன் செய்து பணத்தை திருப்பி தரும்படி கேட்டார்.

ஆனால் அவர் தான் பணமே வாங்கவில்லை என்று கூறி தொடர்பை துண்டித்து விட்டார்.

அதன்பின் அவருக்கு போன் செய்தால் எடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரமேஷ் விரக்தி அடைந்தார்.

நேற்று மதியம் குளியலறைக்கு சென்ற அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ரமேஷ் பணம் செலுத்திய வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது அது விசாகப்பட்டினம் சீத்தம் பேட்டையைச் சேர்ந்த கல்யாணி என்பவருடையது என்பது தெரியவந்தது.

இதையடுத்து பொலிஸார், விசாகப்பட்டினம் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.