முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் 3 மணி நேரம் தீவிர விசாரணை!

கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட பல சந்தேகநபர்களின் தங்க நகைகள் மற்றும் பெறுமதியான உடமைகள் மாயமாகியுள்ளமை தொடர்பில் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு (எஸ்.ஐ.யூ.) சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட் சகர் மெவன் சில்வாவின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி நேற்றையதினம் கடந்த அரசாங்கத்தின் காலப் பகுதியில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்திரா வாகிஷ்டவிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர்கள் பலர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினராலேயே கைதுசெய்யப்பட்ட நிலையில் அவர்களது உட மைகளே கைதின் பின்னர் மாயமாகியுள்ளன.

அதன்படியே நேற்று குறித்த பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் சுமார் 3 மணி நேரம் வரை தீவிர விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே இந்த விவகாரத்துக்கு மேலதிகமாக அரச உட மையாக்கப்பட்ட வாகனம் ஒன்றினை புனர்வாழ்வளிக்கப்பட்ட சந்தேகநபர் ஒருவருக்கு மீள வழங்கியமை தொடர்பிலும் இதன் போது முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்திரா வாகிஷ்ட விடம் விசாரிக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.