ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடாத்திய தாக்குதலில் துருக்கியில் 41 பேர் பலி!

இஸ்தான்புல் விமான நிலையத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகர சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஐ.எஸ். பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 41 பேர் பலியாயினர். 200–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் விடுத்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

இந்த கொடிய செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு சட்டத்தின் முன்பாக நிறுத்தவேண்டும்.

பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலை எதிர்த்து போராடும் துருக்கிக்கு ஆதரவாக ஐ.நா. உறுதியாக துணை நிற்கும். இப்பிராந்தியத்தில் பயங்கரவாதத்துக்கு எதிராக போராட சர்வதேச நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சி இத்தருணத்தில் மிகவும் அவசியம்.

தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுவோர் விரைந்து குணமடைய வேண்டுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளர் ஜோஸ்

எர்னெஸ்ட் கூறியதாவது:–
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரசல்ஸ் நகர விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலைப்போலவே இஸ்தான்புல் விமான நிலையத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.

இது பயங்கரவாதிகளின் சர்வதேச தொடர்புகளின் அடையாளச் சின்னமாகவும், பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துவதாகவும் இருக்கிறது.

தாக்குதலில் பலியான அனைவருடைய குடும்பத்தினருக்கும், தங்களது அன்பானவர்களை பறிகொடுத்தவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். பலத்த காயம் அடைந்தவர்கள் வேகமாக குணமடைய விரும்புகிறோம்.

நேட்டோ நாடான துருக்கிக்கு ஆதரவு அளிப்பதில் அமெரிக்கா உறுதியாக துணை நிற்கிறது என்பதை இந்த நேரத்தில் நினைவுபடுத்துகிறோம்.

உலகில் உள்ள நமது நட்பு நாடுகள் மற்றும் கூட்டணி நாடுகளின் உதவியுடன் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ள நாம் உறுதிக்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இந்த தாக்குதல் ஒரு கொடூர செயல் ஆகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

இதேபோல் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, சீனா, கனடா, மலேசியா, அல்பேனியா, நெதர்லாந்து, பாகிஸ்தான் நாடுகளின் தலைவர்களும் இந்த செயலை வன்மையாக கண்டித்து உள்ளனர்.

இஸ்தான்புல் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அங்கு தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாக அமெரிக்க உள்துறை இலாகா தெரிவித்து உள்ளது.

மேலும், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையங்கள் அனைத்தும் உஷார் நிலையில் இருக்கும்படியும் எச்சரித்து இருக்கிறது.

News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.