சீமெந்தின் விலை 60 ரூபாவினால் அதிகரிப்பு - உடனடியாக விலையை குறைக்குமாறு ரஞ்சித் விதானகே கோரிக்கை

மரத்திலிருந்து விழுந்தவரை மாடு முட்டியது போன்று அரசாங்கம் சீமெந்தின் விலையை உயர்த்தியுள்ளதாக நுகர்வோரன் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,
மழை வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது வீடுகளை புனரமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறான ஓர் நிலையில் அரசாங்கம் சீமெந்தின் விலையை 60 ரூபாவினால் உயர்த்தியுள்ளது.
இன்றைய சூழ்நிலையினால் சீமெந்து விலை உயர்த்தப்படுவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கும் அநீதியாகும்,
அவர்களை உதாசீனம் செய்வதாகவே கருதப்பட வேண்டும்.
மழை வெள்ளம் மற்றும் மண் சரிவினால் வீடுகள் கட்டடங்கள் பல சேதமடைந்துள்ளன.
அரசாங்கத்தின் நிவாரணங்கள், உதவிகள் சுற்று நிருபங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது.
எனவே உடனடியாக சீமெந்தின் விலையை குறைத்து மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.