சிகிச்சைக்கு சென்ற 7வயது சிறுமி வைத்தியரால் துஷ்பிரயோகம்..!

கிழக்குப் பிராந்தியத்தின் நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள வைத்தியர் ஒருவரின் தனியார் சிகிச்சை நிலையத்திற்கு சிகிச்சைக்காகச் சென்ற ஏழு வயதுச் சிறுமியொருவரை துஷ்பிரயோத்திற்குள்ளாக்க முயற்சித்த வைத்தியர் ஒருவரை கைது செய்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, சிறுமியின் வாயில் உள்ள காயத்திற்கு சிகிச்சை பெறும் வகையில் நேற்று (20) இரவு 7 மணியளவில் தனது தந்தையுடன் குறித்த வைத்தியசரின் சிகிச்சை நிலையத்திற்குச் சென்ற வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுமியை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என தந்தையை வைத்தியரின் அறைக்கு வெளியில் நிற்கச் சொன்ன வைத்தியர், மகளை மட்டும் தனது அறையில் வைத்து கதவை மூடிவிட்டதாகவும், பின்னர் தனது மகள் கதறியழுததாகவும் மகளை பார்க்க, தந்தை கதவை தட்டியபோது கதவைத் திறந்து, காயத்தின் வலி காரணமாக சிறுமி அழுவதாக குறிப்பிட்டு மீண்டும் கதவை மூடியதாக தெரிவித்த சிறுமியின் தந்தை, சிறுமி வெளியில் வந்து கூக்குரலிட்டு அழுததாகவும் தெரிவித்தார்.

அறையில் தன்னை வைத்து கதவை மூடிய வைத்தியர் அவரது ஆணுறுப்பை தனது வாயில் வைத்து திணிக்க முற்பட்டதாக சிறுமி கூறியதையடுத்து, அங்கிருந்து சென்ற சிறுமியின் தந்தை சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுள்ளார்.

இதனை அடுத்து, அன்றைய தினம் இரவு கைது வைத்தியர் செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சிறுமி அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து சம்மாந்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.