Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

சிகரட் வரி நூற்றுக்கு 90 வீதம் அதிகரிப்பு

Bublished By Online Ceylon on Wednesday, June 1, 2016 | 1:35 PM

(ப.பன்­னீர்­செல்வம்)

சிக­ரட்­டுக்­கான வரியை அதி­க­ரிப்­பது தொடர்­பான யோசனை அமைச்­ச­ர­வைக்கு முன்­வைக்­கப்­படும் . எதிர்­வரும் 2020 ஆம் ஆண்டில் இலங்­கையில் புகை­யிலை பயிர்ச்­செய்­கைக்கு தடை ஏற்­ப­டுத்­தப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்

உலக புகை­யிலை எதிர்ப்பு தினம் தொடர்­பான நிகழ்வு நேற்று செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பு பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தின் பி. குழு அறையில் இடம்­பெற்­றது. இதில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

ஜனா­தி­பதி இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், சிகரட் புகைப்­பதால் இலங்­கையில் ஒரு­வ­ரு­டத்­திற்கு 25000 பேர் உயி­ரி­ழக்­கின்­றனர். இதில் பெரும்­பா­லானோர் சிகரட் புகையை சுவா­சிக்கும் பிள்­ளை­களே இடம்­பெ­று­கின்­றனர். இன்று நாட்டில் வறு­மையில் வாடும் குடும்­பங்கள் சிகரட் பழக்­கத்­தி­னாலும், மது­பா­வ­னை­யா­லுமே அந்த நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளனர். அவர்­க­ளது குடும்ப வரு­மா­னத்தில் நூற்­றுக்கு 35 சத­வீ­தத்தை சிக­ரட்­டுக்கும், மது­வுக்­குமே செலவு செய்­கின்­றனர். இதனால் அவர்கள் வறு­மை­யி­லி­ருந்து மீள முடி­யா­துள்­ளது. ஒரு­புறம் வறுமை மறு­புறம் நோய் இவர்­களை வாட்டி வதைக்­கின்­றது.

எனவே இதனை தடுக்க பல்­வேறு தெ ளிவு­ப­டுத்­தல்கள், வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டாலும், புகை­யிலை மது உற்­பத்தி நிறு­வ­னங்கள் அதற்கு எதி­ராக சூட்­சு­ம­மாக தமது வியா­பார பிர­சா­ரங்­களை மக்களை ஏமாற்றும் விதத்தில் முன்­னெ­டுக்­கின்­றன. இலங்கை புகை­யிலை கூட்­டுத்­தா­பனம் என பிறப்பு சான்­றி­தழை இந் நிறு­வனம் பெற்­றி­ருந்­தாலும், அதன் உரி­மை­யா­ளர்கள், பங்­கா­ளர்கள் அனை­வரும் வெளி­நாட்­ட­வர்கள்.

சிக­ரட்­டுக்­கான வரிகள் அதி­க­ரிக்­கப்­ப­டு­வ­தில்லை. இது தொடர்­பாக இன்று (நேற்று) செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெறும் அமைச்­ச­ரவை கூட்­டத்தில் நாம் யோச­னையை முன்­வைப்போம். உட­ன­டி­யாக சிக­ரெட்­டுக்­கான வரியை அதி­க­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும்.

எதிர்­வரும் 2018 ஆம் ஆண்டு அஸ்­பெஸ்டாஸ் பாவனை நாட்டில் தடை­செய்­யப்­ப­ட­வுள்­ளது. அதே­போன்று 2020 ஆம் ஆண்டில் இலங்­கையில் புகை­யிலை பயிர்ச்­செய்­கைக்கு தடை விதிக்­கப்­படும்.

எனவே புகை­யிலை பயிர்­ச்செய்­கை­யா­ளர்­க­ளுக்கு மாற்று பயிர்ச்­செய்கை தொடர்பில் தெ ளிவு­ப­டுத்­து­மாறு விவ­சாய அமைச்­ச­ுக்கு தெரி­வித்­துள்ளேன். அர­சாங்கம் நாட்டு மக்­க­ளுக்­கான தனது பொறுப்பை நிறை­வேற்றும் என்றார். சுகா­தார அமைச்சர் டாக்டர் ராஜித சேனா­ரத்ன இந்த நிகழ்வில் உரை­யாற்­று­கையில் கடந்த காலத்தில் புரட்சி செய்து அந்த ஆட்­சியை கவிழ்த்து நல்­லாட்­சியை உரு­வாக்­கினோம்.

இதேபோன்று நாட்டில் சிகரட் பாவனையை ஒழிப்பதற்கு அனைத்தையும் முன்னெடுப்போம். சிகரட் மீதான வரியை நூற்றுக்கு 90 வீதம் உயர்த்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றார்.
நண்பர்களுக்கு பகிரவும் :

0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved