Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

Update: டில்ஷான் - விளையாட்டுத் துறை அமைச்சர் முரண்பாடு, விரைவில் நாட்டை விட்டு வெளியேறுகிறார்

Bublished By Online Ceylon on Wednesday, June 1, 2016 | 10:10 PM

திலகரத்ன டில்சான் இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டிகளில் விளையாடாமைக்கும் கிரிகெட்டில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தமைக்கும் விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி கமகேவுடன் இடம்பெற்றுள்ள கருத்து முரண்பாடுகளே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி இங்கிலாந்துக்கு செல்வதற்கு முதல் விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றுள்ள கலந்துரையாடலின் போதே இருவருக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருவருக்குமிடையிலான, வாய்த்தர்க்கமானது அரசியல் விடயங்கள் வரை சென்றதாகவும் சம்பந்தப்பட்ட தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை 'எனக்கு விருப்பமான வகையில் விளையாட முடியாதவர்கள் மற்றவர்களுக்கு வாய்ப்பளித்து விட்டு செல்லாம்' என அமைச்சர் தயாசிறி கூறிய வேளை 'தாங்கள் கூறுவது போல் எனக்கு விளையாட முடியாது' என்று கூறிவிட்டு டில்சான் அங்கிருந்து சென்றுவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா பயணம்
இலங்கை கிரிகெட் சபையால் புறக்கணிக்கப்பட்டமையால் தில்ஷான் குடும்பத்தோடு அவுஸ்திரேலியா செல்லவுள்ளதாகவும் , அவர் அங்கேயே நிரந்தரமாக தங்கி விடப்போவதாகவும் தகவல்கள் சில வெளியாகியுள்ளது
தில்ஷான் இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும் நம்பத் தகுந்த வட்டாரங்களின் படி அவர் இம்முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அவர் ஒருநாள் , இருபதுக்கு 20 போட்டிகளில் மாத்திரமே விளையாடி வருகின்றார்.
இந்நிலையில் அவர் விரைவில் தனது ஓய்வு மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் முடிவை அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved