இரத்ததானத்தில் மூன்றாவது முறையாக தவ்ஹீத் ஜமாஅத் அசத்தல் - இன்று விருது கிடைத்தது

இரத்ததானத்தில் அகில இலங்கை மட்டத்தில் மீண்டும் முதலிடம் பிடித்தது தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ)
====================

ஏகத்துவப் பிரச்சாரத்தை நாடு முழுவதும் செய்து வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) சமுதாயப் பணிகளையும் ஒரு சேர முன்னெடுத்து வருவது அனைவரும் அறிந்ததே! அந்த வகையில் கடந்த மூன்று வருடங்களாக இரத்ததானம் வழங்கும் அமைப்புகளில் முதல் இடத்தை தக்க வைத்து வருகிறது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்.- அல்ஹம்து லில்லாஹ்

இரத்ததானம் வழங்குணர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு இன்று (06.14.2016) கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைப்புகள் மட்டத்தில் அகில இலங்கை ரீதியில் இந்த வருடமும் முதல் இடத்தை பிடித்தது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ)

இரத்ததானத்திற்கான விருதை ஜமாஅத்தின் தலைவர் சகோ. R.M ரியாழ் அவர்கள் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் ஜமாஅத்தின் தலைவர் சகோ. ரியாழ், ஜமாஅத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராசிக், துணை தலைவர் சகோ. பர்சான், துணை செயலாளர் சகோ. ரஸ்மின் மற்றும் ஜமாஅத்தின் தேசிய இரத்ததான பொறுப்பாளர் சகோ. அர்சாத் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

-ஊடகப் பிரிவு, தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ)

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.