சார்ஜர் இணைப்பை அகற்றாமல் செல்போன் பேச முயன்ற பெண் மரணம் !

தெலுங்கானா மாநிலம், கரிம்நகர் மாவட்டதில் சார்ஜரில் இருந்த செல்போனை எடுத்துப் பேசிய 28 வயது பெண் செல்போன் திடீரென்று வெடித்த விபத்தில் முகம் சிதைந்து உயிரிழந்தார்.

தெலுங்கானா மாநிலம், கரிம்நகர் மாவட்டத்தில் உள்ள சிடாப்பூர் மண்டலத்தில் வசித்துவந்த விமலா(28)  தனது செல்போனை சார்ஜரில் போட்டுவிட்டு வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார்.

அப்போது, அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. சார்ஜரில் இருந்த இணைப்பை அகற்றாமல் செல்போனை எடுத்து பேச முயன்றபோது திடீரென்று பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது.

இந்த சம்பவத்தில் முகம் கருகி, சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே விமலா உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு பெண் அருகாமையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.