மார்பில் முட்டைகோஸ் இலைகளை வைத்து கட்டுவதால் உண்டாகும் நன்மைகள்!

முட்டைகோஸை இதுவரை நீங்கள் சாம்பார், பொரியல், கூட்டு போன்ற சமையலுக்கு மட்டும் தான் பயன்படுத்தி வந்திருப்பீர்கள்.

ஆனால், முட்டைகோஸ் இலைகளுக்கு வீக்கம் மற்றும் வலியை குறைக்கும் தன்மையும் இருக்கிறதாம். இது குழந்தைகள் மருத்துவத்திற்கான அமெரிக்க அகாடமியின் நியூ மதர்ஸ் பிரெஸ்ட் கைடு எனும் புத்தகத்திலும் கூறப்பட்டுள்ளது.

இரவில் படுக்கும் போது காலில் ஈரமான சாக்ஸ் அணிவதால் கிடைக்கும் நன்மைகள்! குறிப்பாக குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு இது நல்ல தீர்வளிக்கிறது.

சிலருக்கு பாலூட்டும் போது வலி ஏற்படும் அதை குறைக்க இந்த முட்டைகோஸ் இலைகள் உதவுகின்றன. மேலும், தைராய்டு சுரப்பி, கை, கால் வீக்கம், தலைவலி போன்றவற்றுக்கும் கூட இவை நல்ல பயனளிக்கின்றன.

பாலூட்டும் போதிலான வலி:

சில தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் போது கடினமாக அல்லது மிகுந்த வலியை உணர்வார்கள். அந்த வலியை போக்க முட்டைகோஸ் இலைகள் பயன்படுகின்றன.

முறை: முதல் அடுக்கை தவிர்த்து அதற்கு அடுத்த இரண்டாம் அடுக்கான முட்டைகோஸ் இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நிப்பிளில் படாமால் மார்பில் மட்டும் வைத்து மேலாடை அணிந்துக் கொள்ளவும்.

முட்டைகோஸ் புதியதாக இருக்க வேண்டும். அந்த முட்டைகோஸை பயன்படுத்தும் முன்னர் நீரில் ஊற வைத்து கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் அதன் தோல் பகுதியில் நச்சு அல்லது பாக்டீரியாக்கள் இருக்கலாம். மேலும் இது முட்டைகோஸை குளிர்சியாக்குகிறது.
இலையின் நடு பகுதியில் தண்டு போன்று இருக்கும், அதை நீக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும்.

15 – 20 நிமிடம் வரை வைத்திருக்கவும். அதன் குளிர்ச்சி நீங்கி சூடாவது போன்ற உணர்வு வரும் போது அதை நீக்கிவிடவும்.

தொடர்ச்சியான முறையில் இதை செய்து வர, மார்பக பகுதியில் இரத்த நாளவீக்கம் ஏற்பட்டிருந்தால் அதை சரிசெய்ய இது பயனளிக்கும்.

மேலும், பாலூட்டும் போது உண்டாகும் வலியையும் குறைக்க இது உதவும்.

தைராய்டு சுரப்பி: வளர்ச்சிதை மாற்றம், ஹார்மோன் வளர்ச்சி, உடல் பாகங்களின் செயலாற்றல், செரிமான மண்டலம் போன்றவற்றுக்கு தைராய்டு சுரப்பி மிக முக்கியமானது ஆகும்.

தைராய்டு சுரப்பி பிரச்சனை எற்பட்டுள்ளவர்கள் முட்டைகோஸ் இலைகளை தொண்டை பகுதியில் தைராய்டு பிரச்சனை ஏற்பட்டுள்ள இடத்தில் வைத்து கட்டுங்கள் (வெளிப்புறத்தில்).

இரவு முழுக்க இதை பேண்டேஜ் வைத்து கட்டி, காலையில் அகற்றி விடவும். இது தைராய்டு சுரப்பியை பழைய இயல்பு நிலைக்கு திரும்ப உதவுகிறதாம்.

வீக்கம்: கை, கால்களில் வீக்கம் ஏற்பட்டிருந்தால், அவர்களும் கூட இந்த முட்டைகோஸ் இலைகளை நல்ல நீரில் கழுவி சுத்தம் செய்து வீக்கம் உள்ள இடங்களில் பேண்டேஜ் உதவியுடன் இந்த இலைகளை கட்டி வீக்கத்தை குறைக்கலாம்.

முக்கியமாக இதை உறங்கும் போது இரவில் செய்வது நல்ல பயனளிக்கும்.

தலைவலி: தலைவலி உள்ளவர்கள், முட்டைகோஸ் இலைகளை நெற்றியில் வைத்து பயன்படுத்தலாம்.

தொப்பி அல்லது வேறு ஏதேனும் உதவியுடன் தலையில் நிற்கும் வண்ணம் செய்யவும்.

குறிப்பு: சிலருக்கு சரும பிரச்சனைகள் போன்று ஏதேனும் இருந்தாலோ அல்லது அவரவர் உடல் நிலை சார்ந்து ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு இம்முறையை முயற்சி செய்யவும்.

News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.