ஆசிரியர்கள் இனிமேல் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாது - ஹரியானா கல்வி இயக்குனர் உத்தரவு..!!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் ‘‘தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்திற்கு ஜீன்ஸ் அணிந்து வருவதாக எங்கள் கவனித்திற்கு வந்தது.

அவர்கள் சில வேலைகள் தொடர்பாக கல்வி இயக்குனரகம் அலுவலகத்திற்கு வரும்போது அவர்கள் அணிந்துள்ள ஜீன்ஸ் பொறுத்தமற்ற வகையில் உள்ளது.

அதனால், இனிமேல் ஆசிரியர்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாது. அவர்கள் வழக்கமான ஆடைகள்தான் அணிந்து வரவேண்டும்’’ என்று உத்தரவில் குறிப்பிட்டு அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதற்கு ஹரியானா வித்யாலயா ஆதியபாக் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில் ‘‘இது முற்றிலும் தவறான உத்தரவு. ஆசிரியர்களின் வேலை பாடம் சொல்லிக்கொடுப்பததுதான்.

அதை ஜீன்ஸ் அல்லது வேட்டி எது அணிந்து சொல்லிக்கொடுத்தால் என்ன’’ என்று கூறினார்கள்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.