அடையாள அட்டைகள் இரண்டும், வாகன அனுமதிப்பத்திரம் இரண்டும் வைத்திருந்தவர் கைது!

இரண்டு தேசிய அடையாள அட்டைகளையும், இரண்டும் வாகன அனுமதிப்பத்திரத்தையும் வைத்திருந்த ஒருவர் திருகோணமலை, குச்சவெளிப் பொலிஸாரினால், சனிக்கிழமை(18) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். குறித்த நபர், மற்றுமொரு நபருடன் திருகோணமலையில் இருந்து குச்சவெளிக்கு வந்துகொண்டிருந்த போது, அவர்கள் பயணித்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போதே இருவரில் ஒருவரிடம், இரண்டு அடையாள அட்டைகள் இருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு தேசிய அடையாள அட்டை குருநாகல் முகவரியையும் மற்றைய தேசிய அடையாள அட்டை பொல்கஹவெல முகவரியையும் கொண்டிருந்ததோடு அதிலொரு தேசிய அடையாள அட்டையில் பிறந்த ஆண்டு 1978 ஆண்டு என்றும் மற்றையதில் 1970 ஆண்டு என்றும் குறிக்கப்பட்டடிருந்தாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரையும் இன்று மாலை திருகோணமலை, குச்சவெளி நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய போது, தேசிய அடையாள அட்டைகள் இரண்டை வைத்திருந்த சந்தேகநபரை, இம்மாதம் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கும் மற்றைய நபரை இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்லுவதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.