லோன் வாங்குபவர்களிடம் கையெழுத்துக்குப் பதிலாக நிர்வாண புகைப்படங்களை கேட்டு வாங்கும் சீனர்கள்!

சீனாவில் இணையத்தளத்தின் மூலம் கடன் கொடுக்கும் நபர்கள் உத்திரவாத கையெழுத்துக்குப் பதிலாக பெண்களிடம் அவர்களின் நிர்வாண புகைப்படங்களை கேட்டு வாங்குகிறார்கள்.

சீனாவில் இணையத்தளத்தின் மூலம் சிலர் கடன் கொடுத்து வருகிறார்கள். அவர்கள் கடன் கேட்கும் பெண்களிடம் உத்திரவாத கையெழுத்துக்குப் பதிலாக நிர்வாண புகைப்படங்களை கேட்கிறார்கள் என அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிர்வாண புகைப்படங்களுடன் அடையாள அட்டைகளையும் வாங்கி வைத்துக் கொள்கிறார்களாம். கடனை குறிப்பிட்ட நேரத்தில் திருப்பிக் கொடுக்காவிட்டால் நிர்வாண புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவோம் என மிரட்டுகிறார்களாம்.

தங்களின் மானம் போய்விடும் என்ற பயத்தில் கடன் வாங்கிய பெண்கள் அந்த நபர்கள் கேட்கும் வட்டியை கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேறு வழியில்லாமல் கடன் வாங்கும் பெண்களின் மானத்தோடு விளையாடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.