இலங்கையில் சிறுமிகளை விட சிறுவர்களே அதிகளவு துஷ்பிரயோகம்??

இலங்கையில் சிறுமிகளை விட சிறுவர்களே அதிகளவு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரி எம்.காஞ்சனா சுபசிங்க தெரிவித்துள்ளார்.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஆய்வுகளுக்கு அமைய இலங்கையில் 15 வீதமான சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதுடன் 20 வீதமான சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆண் சிறுவர்கள் எங்கு சென்றால் என்ன, நீராட்டி விட்டு வீட்டுக்குள் அழைத்து விடலாம் என பல பெற்றோர்கள் கூறுவதை நாங்கள் கேட்டிருக்கின்றோம்.

ஆனால் தற்போது பெற்றோர்கள் இந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

பாலியல் துஷ்பிரயோகங்கள் காரணமாக சிறுவர்களுக்கு உடல் ரீதியாக மாத்திரமல்ல உளவியல் ரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

தொடர்ந்தும் சிறுவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் சிக்கினால், அவர்களை அதில் இருந்து மீட்பதும் சிரமமான காரியம்.

சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் போது, அது குறித்து சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கோ, பொலிஸாருக்கோ தெரியப்படுத்துவது பாரிய பணியாகும் எனவும் எம்.காஞ்சனா சுபசிங்க கூறியுள்ளார்.

News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.