வாழ்க்கையை அற்பமான விஷயங்களுக்காகச் செலவழித்துவிட்டால், முக்கியமான விஷயங்களுக்கு இடம் இருக்காது..!!

ஒரு கணவன் தன் மனைவியை ஆற்றங்கரைக்குத் அழைத்துப் போயிருந்தார் அங்கு அவளிடம் ஒரு பையைக் கொடுத்து, பெரிய பெரிய கற்களைக் காண்பித்து,
இந்தப் பையை அந்தக் கற்களால் நிரப்பு என்றார்.

கனவன் சொன்னது போல் அந்தப் பையை நிரப்பி கணவனிடத்தில் கொடுத்து,
இதற்கு மேல் நிரப்ப முடியாது என்றாள்.

கணவர் கீழே கிடந்த கூழாங்கற்களில் சிலவற்றை எடுத்து,
அதே பையில் போட்டுக் குலுக்கினார்.
அவை பெரிய கற்களுக்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் இறங்கின.

அதற்கு மேல் கூழாங்கற்களைப் போட இடம் இல்லாமல் போக,
இப்போதாவது நிரம்பிவிட்டதாக ஒப்புக் கொள்வீர்களா ?” எனக் கேட்டாள் மனைவி.

கணவன் அங்கேயிருந்த மணலை அள்ளி மீண்டும் பையினுல் போட்டு பையை மேலும் குலுக்கினார்.

கற்கள், கூழாங்கற்களுக்கிடையில் இருந்த இடைவெளிகளில் மணல் இறங்கியது.

பிறகு மனைவியிடத்தில் இதே பையை முதலில் மணலால் நிரப்பியிருந்தால், பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா ? என்று கணவர் கேட்டார்,  இருந்திருக்காது என்று ஒப்புக் கொண்டாள் மனைவி.

வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய
அன்பு,
கருணை,
உடல்நலம்,
மனநலம் போன்ற உன்னதமான விஷயங்கள், பெரிய கற்கள் போன்றவை.

வேலை,
வீடு,
கார் , போன்ற செல்வங்கள் கூழாங்கற்களுக்குச் சமமானவை.

கேளிக்கை,
வீண்_அரட்டை போன்ற அற்ப விஷயங்கள் இந்த மணல் போன்றவையாகும்,முதலில் பெரிய விஷயங்களுக்கு வாழ்க்கையில் இடம் கொடுத்தால்,
அதன் பின்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும்.

வாழ்க்கையை அற்பமான விஷயங்களுக்காகச் செலவழித்துவிட்டால், முக்கியமான விஷயங்களுக்கு இடம் இருக்காது என்றார் கணவர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.