சிகிச்சைக்காகச் சென்ற பெண்ணின் கையை முறித்த தாதி..!!

சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குச் சென்ற பெண் ஒருவரின் கையை முறித்த சம்பவம் ஒன்று அனுராதபுரம், நிலுபேவ வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பெண் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக நிலுபேவ வைத்தியசாலைக்குசென்றிருந்த போதே தாதி ஒருவர் இரத்த பரிசோதனை மேற்கொள்ளும் போது குறித்தபெண்ணின் கையை முறித்துள்ளதாகதெரிவிக்கப்பட்டு
ள்ளது.

வைத்தியசாலையில் இருந்த அந்த தாதி, பெண்ணின் வளைந்திருந்த(ஊனமுற்ற கை) கையைநீட்டுவதற்கு முயற்சி செய்த போதே இவரது கை முறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறுபாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து பெண் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண், எனது ஊனமுற்ற கையை தாதி நேராக நீட்டினார் என முறைப்பாடுசெய்துள்ளார்.

குறித்த பெண் 15 வருடங்களாக மூட்டுப் பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்என்று பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள், இது தொடர்பில் மாவட்ட சுகாதாரஅதிகாரிகளிடம் முறைப்பாடு செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.