யாழ்ப்பாணம் மதுபான விற்பனையில் முதலிடம்...!

புள்ளிவிபர ரீதியாக யாழ்ப்பாணம் மதுபான விற்பனையில் முதலிடம் பெற்றுல்லது.

யாழ்ப்பாணத்தில் மதுபானம் அருந்தும் யாழ்ப்பாணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கருதுவது எவ்வளவு தூரம் சரியானது என்பது கேள்விக்குரியது.

அதற்கான காரணங்கள்
1. கள்ளின் விற்பனையில் வீழ்ச்சி குடிகாரர்கள் கள்ளை தவிர்த்து இறக்குமதிச் சரக்குகளுக்கு மாறியிருக்கின்றார்கள்.
2. ஏராளமான நிறுவனங்கள் தற்போது தமது ஆண்டு கொண்டாட்டங்களை யாழ்ப்பாணத்தை மையப்படுத்தியே நிகழ்த்துகின்றார்கள். அதற்கான மதுபான நுகர்வும் யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது.
3. கட்டுமான வேலைகளுக்கும் பிற வேலைகளுக்கும் என ஏராளமான தொழிலாளர்கள் பிற மாவட்டங்களில் வந்து இங்கு தங்கியுள்ளார்கள். அவர்களுள் பெரும்பாலானோர் தினம் தினம் மதுபானம் நுகர்கின்றார்கள். சாரதிகளும் விற்பனைப் பிரதிநிதிகளும் உள்ளடங்குவர்.
4. யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள படையினரின் தேவைக்கான மதுபான நுகர்வும் இங்கேயே நிகழ்கின்றது.
5. யாழ்ப்பாணத்துக்கான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பிற மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது அதிக வீதத்தால் அதிகரித்துள்ளது. அவர்கள் ஒன்றும் வரும்போது அம்பாந்தோட்டையிலோ அனுராதபுரத்திலோ பொலநறுவையிலோ மதுபானம் வாங்கி வருவதில்லை.
6. வடக்கின் பிறமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தேவை நிமிர்தம் வருவோரில் சிலர் திரும்பும் போது மதுபான போத்தல்களுடனேயே திரும்புகின்றார்கள்.
7.அடிக்கடி பல்வேறு நிகழ்வுகள் வர்த்தக கண்காட்சிகள் தொழில் சந்தைகள் என சர்வதேச நிறுவனங்களின் பங்குபற்றுதலுடனான நிகழ்வுகளும் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளது. இதற்காக யாழ்ப்பாணத்துக்கு படையெடுப்போரும் யாழ்ப்பாணத்தில் விற்பனையாகும் மதுபானங்களுடனேயே மகிழ்ந்திருக்கின்றார்கள்.
எனவே வெறுமனே விஞ்ஞான ரீதியான அணுகுமுறையின்றி மதுபான விற்பனையில் யாழ்ப்பாணம் முதலிடம் என்பதை சமூக நம்பிக்கையீனத்தை விதைக்கும் கருத்துக்களாக மாற்றக்கூடாது. இவ் விடயம் குறித்து துறைசார்ந்தவர்கள் ஆய்வுகளைச் செய்ய வேண்டும். அதைக் காட்டிலும் எப்போதும் உணர்வுகளுக்கு அடிமையாகும் சில உசார் மடையர்கள் மதுபான விற்பனைக்கும் கூட்டமைப்பு அரசியலுக்கும் முடிச்சுப் போடுகின்றார்கள். அத்தகையவர்கள் இக் கருத்துக்கான பின்னூட்லை கூட அரசியல் ரீதியாக திசை திருப்புவார்கள். ஆரோக்கியமான ஆய்வுமுறையலான அணுகுமுறைகள் இன்றி வெறுமனே உணர்ச்சி ரீதியாக விடயங்களை அணுகுவதே எம் பின்னடைவுகளுக்கு காரணம்..

News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.