அதிபரின் உத்தரவை ‘சீரியஸ்’ ஆக எடுத்து நிர்வாணமாக வேலை செய்யும் மக்கள் !

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரஸ் நாட்டு மக்கள் தங்கள் அதிபரின் கட்டளைக்கேற்ப நிர்வாணமாக வேலை செய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளன.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரஸ் நாட்டின் அதிபராக அல்யாக்ஸன்டர் லுகான்ஷேகா பொறுப்பேற்று வருகிறார். நாட்டில் நிலவும் கடுமையான நிதி பற்றாக்குறையால் பெலரஸ் நாட்டின் நாணயமான ‘ருபிள்’-ன் மதிப்பு பெரும்சரிவை சந்தித்துள்ளது.

இதனால், அங்கு கடுமையான பொருளாதார தட்டுப்பாடும், வேலையில்லா திண்டாட்டமும் தலைவிரித்து ஆடுகிறது. ‘இந்த நிலையை மாற்ற வேண்டுமானால் பெலாரஸ் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது ஆடைகளை கழற்றிவைத்துவிட்டு, வியர்வை சிந்த உழைக்க வேண்டும்’ என அதிபர் அல்யாக்ஸன்டர் லுகான்ஷேகா சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த உத்தரவை ‘சீரியஸ்’ ஆக எடுத்துகொண்ட பலர், தங்களது பணியிடங்களில் ஆடைகளை எல்லாம் அவிழ்த்துவிட்டு, முழு நிர்வாணமாக வேலை செய்ய தொடங்கி விட்டனர்.

இதை ரகசியமாக செய்யாமல், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களாக பதிவிட்டு வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் ஐரோப்பிய கண்டத்தையும் கடந்து, ரஷியா, உக்ரைன் வழியாக உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது.

News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.