காதலை ஏற்க மறுத்த ஆசிரியை அரிவாளால் வெட்டிவிட்டு தற்கொலை முயன்ற காதலன்..!

நாகர்கோவில் அருகே காதலை ஏற்க மறுத்த பள்ளி ஆசிரியையை அரிவாளால் வெட்டி விட்டு, கழுத்தை அறுத்து வேன் டிரைவர் தற்கொலைக்கு முயன்ற பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

பள்ளி ஆசிரியை நாகர்கோவில் அருகே ஆண்டார்குளம் சி.எஸ்.ஐ. சர்ச் தெருவை சேர்ந்தவர் சுடலைமணி.

இவருடைய மகள் செல்வக்குமாரி (வயது 24). ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

இவர் செண்பகராமன்புதூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தபோது, அதே கல்லூரியில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் வேப்பிலாங்குளத்தை சேர்ந்த சுடலைக்கண் (27) என்பவர் வேன் டிரைவராக பணிபுரிந்தார்.

கல்லூரிக்கு செல்லும்போது செல்வக்குமாரியும், சுடலைக்கண்ணும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

இதன்பிறகு செல்வக்குமாரியை சுடலைக்கண் ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

தனிமையில் இருக்கும்போது செல்வக்குமாரியின் நினைப்பிலேயே சுடலைக்கண் இருந்துள்ளார். இதற்கிடையில் செல்வக்குமாரி கல்லூரி படிப்பை முடித்து விட்டார்.

ஒரு தலைக்காதல் இதன் பின்னர் சுடலைக்கண்ணால் சந்திக்க முடியவில்லை. இது அவருக்கு வேதனையை ஏற்படுத்தியது.

செல்வக்குமாரி கல்லூரி படிப்பை முடித்ததும், தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்க தொடங்கினார்.

இந்தநிலையில் தன்னுடைய காதலை, செல்வக்குமாரியிடம் சுடலைக்கண் வெளிப்படுத்தினார்.
ஆனால் அவர் அதை ஏற்கவில்லை.

எனினும் சுடலைக்கண்ணால் காதலை மறக்க முடியவில்லை.

செல்வக்குமாரியின் மனதில் இடம் பிடிப்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டார்.

ஆனால் சுடலைக்கண்ணுக்கு அவர் நினைத்த மாதிரி எதுவும் நடக்கவில்லை.

நாளுக்கு நாள் சுடலைக்கண்ணின் தொல்லை அதிகரித்ததால், செல்வக்குமாரி அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில், தனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணம் சுடலைக்கண்ணுக்கு ஏற்பட்டது.

இதனையடுத்து நேற்று சுடலைக்கண், செல்வக்குமாரியின் ஊரான ஆண்டார்குளத்துக்கு சென்றார். சிறிது நேரத்தில் செல்வக்குமாரி வீட்டில் இருந்து புறப்பட்டு, தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

உடனே சுடலைக்கண், அவரை பின்தொடர்ந்து சென்றார். திடீரென செல்வக்குமாரியை வழிமறித்து பேச்சுக்கொடுத்தார்.

அவரிடம் பேச விருப்பம் இல்லாத செல்வக்குமாரி, விறு.. விறு.. என வேகமாக நடக்க தொடங்கினார்.

ஆனாலும் சுடலைக்கண், செல்வக்குமாரியை விடாமல் துரத்தி சென்றார்.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சுடலைக்கண், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செல்வக்குமாரியின் கழுத்தில் வெட்டினார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத செல்வக்குமாரி சுதாரித்து கொண்டு விலகினார். இதனால் அரிவாள் வெட்டு அவரது தோள்பட்டையில் விழுந்தது. உடனே, அவர், ‘அய்யோ, அம்மா...’ என அலறியபடி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த சுடலைக்கண், செல்வக்குமாரி இறந்து விட்டதாக நினைத்து, போலீசுக்கு பயந்து கையில் இருந்த அரிவாளால் தனது கழுத்தை வேகமாக அறுக்க தொடங்கினார்.

சிறிது நேரத்தில் அவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். பரபரப்பு இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வேன் டிரைவர் சுடலைக்கண் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும், ஆசிரியை செல்வகுமாரி நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டனர்.
இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம், கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன், சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலை ஏற்க மறுத்ததால் பள்ளி ஆசிரியையை அரிவாளால் வெட்டி, டிரைவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.