Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

இராணுவப் பாதுகாப்பை தொடர்ந்து தனக்கு வழங்குமாறு கோட்டா கோரிக்கை!

Published on Tuesday, June 28, 2016 | 2:22 PM

தனக்கு இராணுவப் பாதுகாப்பை தொடர்ந்தும் வழங்குமாறு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு பித்தல சந்தியில் கடந்த 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை திங்கட்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது கோட்டாபய ராஜபக்ச மன்றில் முன்னிலையாகியுள்ளார்.

வழக்கு விசாரணையை அடுத்து நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த ஊடகவியலாளர்களிடையே கருத்து தெரிவித்தபோதே கோட்டாபய ராஜபக்ச இதனைக் கூறினார்.

இதேவேளை குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற வேளையில் தான் அலரிமாளிகைக்கு சென்றுகொண்டிருந்ததாகவும், குண்டு வெடித்தபோது வீசப்பட்டு விழுந்ததாகவும் அவர் மன்றில் சாட்சியமளிக்கையில் கூறியுள்ளார்.

நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved