சுவிட்சர்லாந்தில் பெற்றோரை கொடூரமாக குத்திக் கொன்ற மகன் !

சுவிட்சர்லாந்து நாட்டில் பெற்றோரை கொடூரமாக குத்திக் கொன்ற மகன் மீதான வழக்கு நேற்று நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது.

சுவிஸின் சூரிச் மாகாணத்தில் உள்ள Zollikon என்ற நகரில் Andreas K என்ற 32 வயதான நபர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

இவரது குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தந்தை(63) மற்றும் தாய்(66) ஆகிவர்களுக்குள் எழுந்த தகராறில் மகனும் ஈடுப்பட்டுள்ளார்.

பிரச்சனை நிமிடத்திற்கு நிமிடம் தீவிரமாக மகன் வேகமாக சமையலறைக்குள் நுழைந்து கத்தியை எடுத்து வந்துள்ளார்.

பின்னர் தாய் மீது 40 முறையும் தந்தை மீது 17 முறையும் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளான்.

தந்தையை தாக்கிய போது கத்தி பாதியாக உடைந்து கத்தி அவரது உடலிலேயே தங்கி விடுகிறது.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக பொலிசார் உடனடியாக மகனை கைது செய்தனர். விசாரணை செய்ததில் குடும்ப பிரச்சனையால் தான் இந்த இரட்டை கொலை நிகழ்ந்துள்ளதாக தெரியவந்தது.

பெற்றோரை கொலை செய்ததை மகன் ஒப்புக்கொண்டார். மேலும், கடந்த காலங்களில் அவர் பல குற்றச்செயல்களிலும் ஈடுப்பட்டுள்ளது தெரியவந்தது.

பெற்றோரை மகன் கொடூரமாக கொலை செய்த இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

கொலையாளி குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.