பத்து வயது சிறுவனுக்கு காய்ச்சிய கரண்டியால் சூடு வைத்தவர் கைது!

பத்து வயது சிறுவன் மீது நெருப்பில் காய்ச்சிய கரண்டியால் சூடு வைத்து கொடுமைப்படுத்திய பரிதாபகரமான சம்பவம் ஒன்று இன்று (23) வியாழக்கிழமை மாலை காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனையில் இடமபெற்றுள்ளது.

பாலமுனை ஆர்.டி.எஸ்.வீதியிலுள்ள மேற்படி சிறுவனின் தாயும் தந்தையும் வெளிநாட்டில் உள்ளனர்.

குறித்த சிறுவன் ஒன்றுவிட்ட சகோரதரனின் வீட்டில் வசித்து வருகிறான். குறித்த ஒன்றுவிட்ட சகோதரனே இச்சிறுவன் மீது இன்று மாலை நெருப்பினால் காய்ச்சப்பட்ட கரண்டியினால் இடுப்பு மற்றும் பின்புறத்தில் சூடு வைத்துள்ளார் என தெரியவருகிறது.

ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் சிறுவனை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இச்சிறுவன் பாலமுனை அஸ்ரப் வித்தியாலயத்தின் மாணவனாவான்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.